நம்மில் பலரும் முட்டையை வேகவைக்கும் தண்ணீரை கீழே தான் ஊற்றுகின்றனர். ஆனால் அவற்றில் நிறைய சத்துக்கள் உள்ளன. எவ்வாறு இதனை பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பலரும் முட்டைகளை வேகவைத்த பிறகு மீதமுள்ள தண்ணீரை கீழே தான் ஊற்றுகின்றனர். இருப்பினும், இந்த வீணாகும் நீர் தோட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தண்ணீரை உங்கள் செடிகளுக்குப பயன்படுத்தினால் கூடுதல் நன்மை கிடைக்கும்.
இந்த தண்ணீர் நன்கு ஆரியவுடன் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்கள் தாவரங்களின் வேர்களுக்கு நேரடியாக பயன்படுத்தலாம், அவை அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுவதை உறுதி செய்கின்றன.
குளிர்காலத்தில், தாவரங்களுக்கு குறைந்த நீர் தேவைப்படுகிறது. அவற்றின் வளர்ச்சி மற்றும் உயிர்ச்சக்தியை ஊக்குவிக்க ஒவ்வொரு நாளும் இயற்கையான சூரிய ஒளியில் அவை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த எளிய மற்றும் பயனுள்ள தோட்டக்கலை ஹேக் உங்கள் தாவரங்களுக்கு கூடுதல் புத்துணர்ச்சி கொடுக்கும். உங்கள் தாவரங்களை துடிப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
முட்டை ஓடுகளில் இருக்கும் கால்சியம், மண்ணின் pH அளவை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளி மற்றும் மிளகுத்தூள் போன்ற கால்சியம் தேவைப்படும் தாவரங்களுக்கு இது மிகவும் சாதகமானது.
இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீர் தாவரங்களை பசுமையாகவும், துடிப்பாகவும் வைத்திருக்க பயன்படுத்தலாம். செயற்கை இரசாயனங்கள் பயன்படுத்தாமல் தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் இந்த இயற்கை செயல்முறை நல்ல பலனை தருகிறது.