வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது வேலூர் மாவட்டத்தில் கன மழையானது கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், வேலூர் பாலாற்றில் தற்போது 20 ஆயிரம் கனஅடி நீரானது இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த நிலையில் பாலாற்றின் கரையோரம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அந்த பகுதியின் கரையோரம் உள்ளவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேவி.குப்பம் அருகே பசுமாத்தூர் கிராமத்தின் பால் ஆற்றின் கரையோரம் உள்ள ஒரு மாடி வீடு ஆனது அப்படியே முழுவதுமாக அந்த பாலாற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. அந்த மாடி வீடானது பாலாற்றின் கரையோரம் இருப்பதால், அங்கு வெள்ளம் சூழ்ந்து அடித்தளம் முழுவதுமாக அந்த நீரில் மூழ்கியதால், அந்த வீடு பாலாற்று வெள்ளத்தில் சரிந்து விழுந்து அடுத்து செல்லப்பட்டிருக்கிறது.
வேலூர் பாலாற்றின் கரையோரம் உள்ள வீடு வெள்ளத்தால் அடித்து செல்லும் காட்சி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தியது pic.twitter.com/N89tmZagex
— Jaffer Mohaideen (@jaffermohaideen) November 19, 2021
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு, வழக்கறிஞர் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான வீடு என்பது தெரியவந்துள்ளது. இவர் தற்போது பெங்களூரில் வசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வீட்டில் பொருட்களானது முழுவதுமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அந்த வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள், உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. வீடு ஆற்றில் முழ்கும் காட்சியை படம் பிடித்த சிலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர் தற்போது அனைவராலும் அந்த காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ALSO READ கழுத்தில் மாட்டிய தையல் ஊசி! திறமையாக செயல்பட்ட மருத்துவர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR