அதிமுக ஆட்சியில் குட்கா மந்திரி பதவி விலகினாங்களா? செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி

அதிமுக ஆட்சியில் குட்கா புகாரில் சிக்கிய அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதவி விலகினார்களா? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2023, 08:29 PM IST
  • செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி
  • எடப்பாடி பழனிசாமி பதவி விலகினாரா?
  • சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன்
அதிமுக ஆட்சியில் குட்கா மந்திரி பதவி விலகினாங்களா? செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி title=

விழுப்புரத்தில் விஷ சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்தனர். இதில் இன்னும் பலர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கும் இந்த சம்பவத்தை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்ததுடன் காவல்துறையினருடன் தீவிர ஆலோசனை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருப்பதுடன், தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | முதல்வர் சாப்பிடாமல் கூட விழுப்புரத்திற்கு சென்று பார்வையிட்டார் - துரைமுருகன்!

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் விஷச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதற்கு இதுவே சாட்சி என்றார். காவல்துறையை பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் விஷச்சாராய இறப்புக்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். திமுக அரசின் மெத்தனத்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சாடினார். 

இதற்கு பதில் அளித்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் குட்கா புகாரில் சிக்கிய அமைச்சர் மற்றும் டிஜிபி ஆகியோர் ஏன் பதவி விலகவில்லை என கேள்வி எழுப்பினார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக கூறிய அப்போதைய முதலமைச்சர் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏன் அப்போது பதவி விலகவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார். விஷச்சாராய விபத்து குறித்து இதுவரை முறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இனி அப்படியொரு சம்பவம் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மேலும், அரசு மதுபானக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அவர், கடை மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் உள்ளிட்டோர் விவரங்களை அளித்தால் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பதில் அளித்திருக்கும் அவர், முறைப்படி வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் கள் விற்க அனுமதி? சீமான் சொன்ன முக்கிய கருத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News