இந்தியா முழுவதும் தேர்தல் அலை அடித்து வருகிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் கட்சியின் பிரச்சாரங்களை ஓயாமல் தொடர்ந்து வருகின்றன. கடந்த மாதம், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாவகிறது. இதையொட்டி, தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பாதுகாப்பு அறை முழுவதிலும் சீல் வைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது இங்கு நாள்தோறும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை அவர்களது முகவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்ட மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் திடீரென இன்று மாலை முதல் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் படிக்க | திமுக அரசு மக்களின் கண்ணீரைத் துடைக்காமல் வரவழைக்கிறது - ஆர்பி உதயகுமார்!
திடீரென சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் அதிர்ச்சி அடைந்த அரசியல் கட்சியினர் மற்றும் சிகிச்சை வேட்பாளர்கள் இது தொடர்பாக புகார் அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் சென்றுள்ளனர். இதனிடையே இது குறித்து விளக்கம் அளித்த மாவட்ட நிர்வாகம் மழை பெய்த நிலையில் சிசிடிவி கேமராக்கு செல்லக்கூடிய வயர்களில் சிறிது பழுதை ஏற்பட்ட நிலையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
மேலும் படிக்க | இன்று 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ