Avaniyapuram Jallikattu 2025: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயமடைந்த மதுரையை சேர்ந்த நவீன் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு மட்டுமே பங்கேற்க டோக்கன் வழங்கப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025: 10ஆவது சுற்று நிலவரம்
தற்போது வரை 808 காளைகள் பரிசோதனை செய்யப்பட்டன. ஆனால், அவற்றில் 773 காளைகள் மட்டுமே வாடிவாசலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன. போலி ஆவணங்கள் மற்றும் காயங்களுடன் வந்த மற்ற காளைகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டன. அவை வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்டவில்லை. தற்போது 10ஆவது சுற்று நடைபெற்று வரும் சூழலில், சுமார் 41 நபர்கள் தற்போது வரை காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025: மார்பில் குத்திய காளை
இந்நிலையில், கடந்த ஒன்பதாவது சுற்றில் மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்கிற மாடுபுடி வீரர் 406 எண் கொண்ட ஜெர்ஸியுடன் விளையாடி வந்தார். இந்நிலையில் வாடிவாசலில் இருந்து வந்த காளை ஒன்று நவீன் குமாரின் மர்பில் குத்தியதால், மார்பிலும் முக்கிலும் ரத்தம் சிந்த சிந்த அவனியாபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார்.
மேலும் படிக்க | பொங்கலுக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025: உயிரிழந்த வீரர் நவீன்குமார்
இங்கு மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி செய்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், நவீன் குமார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025: மயக்கமடைந்த காளை
முன்னதாக, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 5வது சுற்றில் விளையாடிய காளை ஒன்று வாடிவாசலை விட்டு வெளியே சென்ற நிலையில், மீண்டும் வாடிவாசலுக்கு வந்து படுத்துக்கொண்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகனங்கள் மூலம் காவல்துறையினரின் உதவியுடன் காளையை அழைத்து செல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இருப்பினும், மீண்டும் அந்த காளையால் நடக்க முடியாமல் அதே இடத்தில் படுத்துக்கொண்டது. இதனால், ஐந்து சுற்றுகள் முடிந்த நிலையில் ஆறாவது சுற்றுக்கு போட்டியில் பங்கேற்க வீரர்கள் காத்திருக்கிறார். தொடர்ந்து, கால்நடை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த மாட்டை உரிமையாளர்கள் ஏற்றி ஜல்லிக்கட்டு களத்தில் இருந்து கொண்டு சென்றனர். தொடர்ந்து அந்த காளைக்கு கால்நடை மருத்துவர்கள் சார்பில் குளுக்கோஸ் மற்றும் களைப்புடன் இருக்கக்கூடிய காளையை நல்ல நிலைக்கு தயார்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | மாட்டு பொங்கலில் உங்கள் வாசலை அழகுபடுத்தும் எளிமையான கோலங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ