#LokSabhaElection: 305 இடங்களில் எந்திரங்கள் மாற்றம்: சத்யபிரதா சாஹூ

தமிழகம் முழுவதும் சரியாக வேலை செய்யாத 305 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Last Updated : Apr 18, 2019, 12:35 PM IST
#LokSabhaElection: 305 இடங்களில் எந்திரங்கள் மாற்றம்: சத்யபிரதா சாஹூ title=

தமிழகம் முழுவதும் சரியாக வேலை செய்யாத 305 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்துக்கு 2வது கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது. 

தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

மீதமுள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய், பிரபு, விக்ரம் பிரபு, சசிகுமார், விஜய் ஆண்டனி, நடிகை குஷ்பு, மீனா, சுருதிஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது:-

வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்ட 305 இடங்களில், வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதால், வாக்குப்பதிவு தொடங்கவே இல்லை. வாக்குப்பதிவு தொடங்க தாமதமான பகுதிகளில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை, டோக்கன் வாங்கியவர்கள் வாக்களிக்கலாம். என கூறினார்.

Trending News