Sasikala’s property attached: சசிகலாவின் சொத்தை வருமான வரித்துறை எடுத்துக் கொண்டது

சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள பையனூர் கிராமத்தில் உள்ள சசிகலாவின் 3 ஏக்கர் 52 சென்ட் பரப்பளவு கொண்ட சொத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 9, 2021, 06:19 AM IST
  • சசிகலாவின் சொத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது
  • பையனூர் பங்களா இப்போது வருமான வரித்துறையிடம் வந்துவிட்டது
  • இது தொடர்பான நோட்டீஸ் பையனூர் பங்களாவில் ஒட்டப்பட்டுள்ளது
Sasikala’s property attached: சசிகலாவின் சொத்தை வருமான வரித்துறை எடுத்துக் கொண்டது  title=

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலாவுக்கு மற்றுமொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னையின் புறநகரில் உள்ள, சசிகலாவுக்குச் சொந்தமான சொத்தை வருமான வரித்துறை இணைத்துக் கொண்டது.

பையனூர் கிராமத்தில் உள்ள சசிகலாவின் 3 ஏக்கர் 52 சென்ட் பரப்பளவு கொண்ட சொத்து பறிமுதல் செய்யப்பட்டது. பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டம் 1988 கீழ், சொத்து பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையின் (Income Tax Department) அறிவிப்பு அங்கு ஒட்டப்பட்டுள்ளது.

it

”வழக்கின் உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுல்ளது. நடவடிக்கைகளின் விளைவுகளை உரிமையாளர் (கள்) அறிந்திருக்கின்றனர். பினாமிதாரருக்கு இந்த சொத்து பறிமுதல் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பினாமி சொத்து பரிவர்த்தனை சட்டம் (Prohibition of Benami Property Transactions Act), 1988 பிரிவு 24 (3) ன் கீழ் மேலே குறிப்பிட்டபடி சொத்தை தற்காலிகமாக இணைப்பது பொருத்தமானது மற்றும் அவசியமானது என்று கருதப்படுகிறது” என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ | சசிகலா மீது வழக்குப்பதிவு; முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் (Tamil Nadu’s late Chief Minister J.Jayalalithaa’s) அண்ணன் மகன் ஜெ.தீபக் மற்றும் அண்ணனின் மகள் ஜெ.தீபா ஆகியோருக்கு இந்த சொத்து இணைப்பு உத்தரவு நகலை வருமான வரித்துறை அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டும் சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்களை வருமான வரித்துறை (IT department) தற்காலிகமாக இணைத்தது குறிப்பிடத்தகக்து.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்தன. அதற்கு முன்னதாக, சிறைதண்டனை முடிந்து வெளியில் வந்த வி.கே.சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும், தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த பிறகு, அவரது உதவியாளர்கள் ஆடியோ கிளிப்களை வெளியிடத் தொடங்கினார்கள். அதிலிருந்து அவர் அரசியலில் ஈடுபடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

READ ALSO | சசிகலாவுக்கு ஆதரவாக கூட்டம் கூட்டிய 80 பேர் மீது வழக்குப்பதிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News