அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே.சி பழனிச்சாமி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், காங்கேயம் தொகுதிகுட்பட்ட பல பகுதிகளில் வெறிநாய்களால் விவசாயத் தோட்டங்களில் உள்ள ஆடுகள் இறந்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொல்லபட்டிருக்கிறது. வெறிநாய் கடிகளால் ஏற்படும் நஷ்ட ஈடு தொகை ஆயிரம் கோடிக்கும் மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை யாருக்கு ஒதுக்கி கொண்டார்கள் என தெரியவில்லை. இதுவரை விவசாயிகள் யாருக்கும் தரவில்லை. இந்த சம்பவத்தை கண்டித்து போரட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | என்னிடம் கேட்காதீர்கள்... பொதுச்செயலாளரை தான் கேட்க வேண்டும் - செங்கோட்டையன் பேச்சு
அதே போல சென்னிமலை பகுதியில் வெறிநாய்களால் ஆடுகளால் கொல்லப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் மூலம் இழப்பீடு வழங்க வேண்டும். இதுபோல் நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அந்த பகுதியைச் சேர்ந்த அமைச்சர் சாமிநாதன் குறைந்த பட்சம் தொலை பேசியில் கூட தொடர்பு கொண்டு கேட்கவில்லை. அமைச்சர் முத்துச்சாமி அழைத்து மாவட்ட ஆட்சியர் மூலம் அழைத்து பேசி இருக்கிறார். பல்லடம் இரட்டை கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை. போலீஸாரின் தனிப்படைகள் எண்ணிக்கைதான் அதிகரிக்கத்து கொண்டு செல்கிறதே தவிர குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. இந்த நிலை தொடர்ந்தால் 20 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெறாது.
அதிமுகவில் ஏற்பட்டிருக்கிற உட்கட்சி குழப்பம், கட்சியை ஒருங்கிணைக்க தவறுகின்ற எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கைகளால் தான் பிரச்சனையால் திமுக செல்வ்வாக்கு பெற்றதாக இருக்கிறது. திமுக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதாக இல்லை. மேற்கு மண்டலம் புறக்கணிக்கபட கூடாது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து செங்கோட்டையன் பதிலளிக்காமல் சென்றது அவர் இன்னும் திருப்தியடையவில்லை என்பதை காட்டுகிறது. தைரியம் இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை நீக்கி பார்க்கட்டும். எடப்பாடி பழனிச்சாமி இந்த இயக்கத்தை ஒருங்கிணைக்கத் தவறினார். சுயநலத்துடன் நடந்து கொள்கிறார். அதிமுகவில் எல்லோரும் ஒன்றிணைக்கபட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். உலகமே அதைத்தான் எதிர்பார்க்கிறது. ஆனால் ஒரு ஆளுக்கு மட்டும் அது புரிய மாட்டேங்குது.
திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மறைமுக ஒத்துழைப்பு தருகிறாரோ எனத்தான் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் பேசுகிறார்கள். செங்கோட்டையனை நீக்க ஏன் தயங்குகிறார்கள் என்ற கேள்விக்கு, நீக்கினால் எடப்பாடி தலைமை இருக்காது என தெரிவித்தார். எம்ஜிஆர் காலத்திலிருந்து இருப்பவர் ஓரங்கட்டுப் படுவார்கள் என்றால் யார் அந்த தலைமையை ஏற்றுக் கொள்வார்கள். அன்னூரில் நடந்த பாரட்டு விழா மட்டுமே பிரச்சனை அல்ல.
பல அதிருப்திகள் எடப்பாடி பழனிச்சாமி மீது உள்ளது. அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பலமாக இல்லை என்ற குறை, அதிமுக பலமாக இல்லை என்ற கருத்து தான் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நீடிக்க மாட்டார். கட்சி நன்றாக இருக்கும். அடுத்த சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். அதிருப்தியால் இன்றைக்கு செங்கோட்டையன் ஆரம்பித்திருக்கிறார். இனி தொடர்ச்சியாக பலர் வருவார்கள், இனி அணிகள் உருவாகாது, அணிகள் ஒருங்கிணையும், எடப்பாடி பழனிச்சாமி ஓரங்கப்பட்டுவார் என தெரிவித்தார்.
மேலும் படிக்க - சொந்த தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் மானியம்! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ