மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்பு...!
ஜூன் 30 வரை மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேடையில் உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் மதுரையில் புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மதுரையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 705 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையை தொடர்ந்து வேலூரில் கொரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 100 என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்பு இன்று 477 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த போதே திருவண்ணாமலையிலும் கொரோனா தொற்று அதிவேகமாக உயர்ந்து வந்தது. அங்கு தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1060 ஆக உயர்நதுள்ளது. நேற்று மட்டும் புதிதாக 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
READ | உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்... கௌசல்யாவின் தந்தை விடுதலை!
வேலூரின் அருகே உள்ள ராணிப்பேட்டையிலும் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. மொத்தம் 470 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. எனவே, இந்த பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்து வருகிறது. இந்நிலையில் மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேடையில் உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு கடந்த 19ம் தேதி தொடங்கி ஜூன் 30 வரை இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. ஞாயிறுகளில் முழுமையான ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.