பொறுத்தது போதும்.. சசிகலாவின் அடுத்த திட்டம்?

Last Updated : Feb 12, 2017, 11:51 AM IST
பொறுத்தது போதும்.. சசிகலாவின் அடுத்த திட்டம்? title=

தமிழக முதலமைச்சராக பதவியேற்க ஆளுநரிடம் உரிமை கோரியும் அவர் முன்வராததால் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டு்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்து யார் ஆட்சி அமைப்பதை குறித்து கவர்னர் வித்யாசாகர்ராவ் தொடர்ந்து நிதானமான போக்கை கடைபிடித்து வருகிறார். இதுவரை எந்த முடிவும் எடுக்க வில்லை. தனக்கு ஆதரவு தெரிவிக்க போதுமான எம்எல்ஏக்கள் தன் வசம் இருக்கிறார்கள், அதனால் முதல்வராக பதவியேற்கிறேன் என்று சசிகலா கவர்னரை நேரில் சந்தித்து உரிமை கோரினார். மேலும் எம்எல்ஏக்களின் பட்டியலையும் கவர்னரிடம் அளித்தார். ஆனால் இது குறித்து ஆளுநர் இதுவரை பதில் எதுவும் அளிக்கவில்லை. 
இந்நிலையில் ஓரளவுக்கு தான் பொறுமையாக இருக்க முடியும் என்று நேற்று (11.02.17) சசிகலா பேட்டி அளித்தார். சசிகலா எச்சரிக்கும் விதத்தில் அளித்த பேட்டியை அடுத்து சென்னை முழுவதும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டது. 

பின்னர் கூவத்தூர் விடுதியில் இருக்கும் எம்எல்ஏக்களை சந்திக்க சசிகலா நேரில் சென்றார். ஆட்சி அமைக்க இன்று மாலைக்குள் ஆளுநர் அழைப்பு விடுக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் சமாதி முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளார் என்று கூறப்படுகிறது. காவல்துறை அனுமதி அளிக்காதபட்சத்தில் போயஸ் கார்டன் அல்லது அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் உண்ணவிரத போராட்டத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

Trending News