வேட்டையன் படத்தின் வசூல் வேட்டை! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?

Vettaiyan Box Office Collection Day 4 Chennai : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேட்டையன் படத்தின் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Oct 14, 2024, 08:50 AM IST
  • வேட்டையன் படத்தின் வசூல் வேட்டை
  • 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
  • சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?
வேட்டையன் படத்தின் வசூல் வேட்டை! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா? title=

Vettaiyan Box Office Collection Day 4 Chennai : டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கத்தில், ரஜினிகாந்த் ஹீராேவாக நடித்திருந்த படம், வேட்டையன். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், வசூலிலும் வேட்டையாடி வருகிறது. 

வேட்டையன் திரைப்படம்:

ஜெய்பீம் படத்தை இயக்கி, இந்தியா முழுவதும் அறியப்பட்ட இயக்குநராக மாறியவர் டி.ஜே.ஞானவேல். இவர், ரஜினிகாந்தியன் 170வது படமான வேட்டையன் படத்தை இயக்கினார். ரஜினி ஹீரோவாக நடிக்கும் படம் என்பதை தாண்டி, ஞானவேல் கண்டிப்பாக நல்ல கதையை படமாக கொடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருந்தது. அதை நல்ல முறையில் அவரும் காப்பாற்றியிருக்கிறார்.

வேட்டையன் படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார் அமிதாப் பச்சன். இவர்கள் மட்டுமன்றி, மஞ்சு வாரியர், ரக்ஷன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

வசூல் விவரம்:

ரஜினிகாந்தின் படம், நல்ல விமர்சனங்களை பெற்றாலும், பெறவில்லை என்றாலும் கண்டிப்பாக வசூலில் சோடை போகாது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது வெளியாகியிருக்கும் வேட்டையன் திரைப்படம் நல்ல கதையம்சத்துடன், ரஜினி படமாக இருப்பதால் முதல் நாளிலேயே நல்ல வசூலை பெற்றது. கடந்த அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம், 68.4 கோடி வசூலித்தது. தமிழகத்தில் மட்டும் 20 கோடி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் 10 கோடி, கேரளா 4.1 கோடி, வட இந்தியாவில் 60 லட்சம் வசூலித்திருக்கிறது. 

வெளியான 4 நாட்களில் 40 முதல் 42 கோடி உலகளவில் வசூலித்திருக்கிறது. இந்தியா முழுவதும் 22 முதல் 25 கோடி வரை வசூலித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. சென்னையில் மட்டும், 4 நாட்களில் இப்படம் 8.2 கோடி ரூபாயை இப்படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. 

கோட் படத்தை முறியடித்ததா?

இப்போதெல்லாம் ரஜினிகாந்தின் படம் வந்தாலே, ரசிகர்கள் அதை விஜய்யின் படத்துடன் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்து விட்டனர். இது, இரு நடிகர்கள் ரசிகர்களுக்கு இடையேயும் நடந்து வரும் வன்ம போராக மாறி வருகிறது. சமீபத்தில் வெளியான விஜய்யின் தி கோட் படம், முதல் நாளில் 120 கோடிக்கும் மேல் வசூலித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் வேட்டையன் படம் அதற்கும் குறைவான வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. கோட் படம் நான்காவது நாளில் 34.20 கோடிகளை வசூலித்தது. வேட்டையன் படமோ 22.25 கோடி வசூலித்திருக்கிறது. இது, முந்தைய நாள் வசூலை விட 16.45% குறைவாக இருப்பதாக சில தரவுகள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | Vettaiyan Review: ரசிகர்களை ஏமாற்றியதா வேட்டையன் படம்? விமர்சனம், இதோ! 

மேலும் படிக்க | வேட்டையன் Vs தி கோட் ! முதல் நாள் வசூல் எந்த படத்திற்கு அதிகம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News