சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கொரோனா தொற்று (Coronavirus) உறுதியான துரைமுருகன் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
முன்னதாக, திமுக தலைவர் கனிமொழிக்கு (Kanimozhi) கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டு இருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த கனிமொழி குணமடைந்து நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மேலும் ஐந்து நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ALSO READ: திகிலைக் கிளப்பும் கொரோனா தொற்று: 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி செயல்முறை மிக மும்முரமாக நடந்துகொண்டிருந்தாலும், மறுபக்கம், தொற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை பல மாநிலங்களில் முந்தைய அளவுகளை பின்னுக்குத் தள்ளி வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொற்றின் ஒற்றை நாள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தின் (Tamil Nadu) பல்வேறு மாவட்டங்களில் நேற்று மட்டும் 3,986 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,459 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9.11 லட்சமாக அதிகரித்துள்ளது.
ALSO READ: திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR