சென்னையில் மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 495 ஆக அதிகரிப்பு..
தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்.... தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 38 ஆண்களும், 28 பெண்களும் அடங்கியுள்ளனர். இதனால், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பரிசோதனை மையங்கள் எண்ணிக்கை 34-லிருந்து 41 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இண்ட்ரூ மட்டும் 7,707 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று மட்டும் 94 பேர் கொரோனா தொற்று குணமடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், மொத்தம் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 960 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 835 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூல்நிலையில், சென்னை, கோவையிலிருந்து 8 முதுநிலை மருத்துவர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அவர்களில் 6 பேர் பிளாஸ்மா சிகிச்சைக்கு தானம் வழங்கியுள்ளனர். பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தானம் வழங்கியுள்ளனர்.
District
|
Confirmed
|
|||
Chennai | 43500 | |||
Coimbatore | 141 | |||
Tiruppur | 110 | |||
Dindigul | 80 | |||
Erode | 70 | |||
Tirunelveli | 65 | |||
Madurai | 460 | |||
Namakkal | 55 | |||
Chengalpattu | 155 | |||
Thanjavur | 54 | |||
Thiruvallur | 53 | |||
Tiruchirappalli | 51 | |||
Viluppuram | 147 | |||
Theni | 44 | |||
Nagapattinam | 44 | |||
Karur | 41 | |||
Ranipet | 38 | |||
Tenkasi | 535 | |||
Thiruvarur | 30 | |||
Salem | 30 | |||
Thoothukkudi | 27 | |||
Cuddalore | 26 | |||
Virudhunagar | 225 | |||
Vellore | 23 | |||
Tirupathur | 18 | |||
Kancheepuram | 718 | |||
Kanniyakumari | 16 | |||
Ramanathapuram | 14 | |||
Sivaganga | 12 | |||
Tiruvannamalai | 111 | |||
The Nilgiris | 9 | |||
Perambalur | 27 | |||
Kallakurichi | 5 | |||
Ariyalur | 5 | |||
Pudukkottai | 1 | |||
Dharmapuri | 1 |
இன்று உறுதி செய்யபட்டா 66 பேரில் சென்னையில் மட்டும 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 495 ஆக அதிகரித்துள்ளது.