தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று டிசம்பர் 12ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர் 10 காலை 08.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
மேலும் படிக்க | அடுத்த 2 நாட்களுக்கு இந்த பகுதிகளில் பலத்த மழை இருக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!
மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து. மேலும் 10 மாவட்டங்களுக்கு கனமழையை செய்யக்கூடும் என அறிவித்திருந்தது. அதன்படி நேற்று அதிகாலை முதல் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திட்டச்சேரி, கீழ்வேளூர், திருக்குவளை, திருப்பூண்டி, பூவை தேடி, விழுந்தமாவடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது. மேலும் சில தினங்களாக மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய துவங்கி இருப்பது சம்பா விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Heavy #rainfall warning for 27 districts across #TamilNadu on 12th Dec, Thursday..
Orange alert issued for 4 districts, for very heavy rain (12-20cms)
Yellow alert issued for 20+ districts, for heavy rain (7-11cms) #NEMonsoon #December #Chennai #weather pic.twitter.com/GfGykusnVX
— Sidharth.M.P (@sdhrthmp) December 11, 2024
வங்கக் கடலில் உருவாகி உள்ள வானிலை அமைப்பு அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 28 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர் பகுதியில் உள்ள மக்களுக்கு தீவிர மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று இருக்கும், எனவே மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மிஐம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 85 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, இது கடந்த ஆண்டை விட 16% அதிகமாகும். தமிழகத்தில் 45 சென்டிமீட்டர் மழை பதிவாகி, 13 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.
மேலும் படிக்க | 'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி' புயலாக மாறுமா? - பாலசந்திரன் சொன்னது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ