தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து கோயில்களிலும் அதிமுகவினர் மழை வேண்டி சிறப்பு யாகம் செய்தனர்!!
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மழைவேண்டி அந்தந்த மாவட்டங்களில், அமைச்சர்கள்,
இன்று யாகம் வளர்த்து பூஜை செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பச்சமலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் முருகன் கோயிலில் செங்கோட்டையன் மழை வேண்டியும் வருண பகவான் அருள்வேண்டியும் யாகபூஜையில் ஈடுபட்டார். ஐந்துக்கும் மேற்பட்ட வேத ஓதுவார்களைக் கொண்டு பூரண கும்ப கலசங்கள் வைத்து யாக வேள்வி நடைபெற்றது. முதலில் விநாயகர் பூஜையும் அதனை தொடர்ந்து முருகன் அருள்வேண்டி சிறப்பு பூஜைகளும், அதன்பின்னர் வருணபகவான் மழை வேண்டி யாக வேள்வியில் நவதானியங்கள் செலுத்தியும் பூரணாதிதி செலுத்தியும் யாகவேள்வி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பச்சமலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் முருகன் கோயிலில் மழை வேண்டி நடத்தப்பட்ட யாகபூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சரவணப் பொய்கையில் வருண பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.