தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது... மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரிப்பு...!
தமிழகத்தில் இன்று மேலும் 6,988 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,409 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 6,988 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 6,926 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 62 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 6,988 பேரில் சென்னையில் மட்டும் 1,329 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 93,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 115 ஆய்வகங்கள் (அரசு - 58 மற்றும் தனியார் - 57) உள்ளன. அதில், இன்று மட்டும் 64,315 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 22,87,334 மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. இன்று கொரோனா வைரஸ் உறுதியானவர்களில், 4,164 பேர் ஆண்கள், 2,824 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,25,553 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 81,161 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று மட்டும் 7,758 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,51,055 ஆக உள்ளது.
தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 89 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 66 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,409 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,273 பேர் சிகிச்சையில் உள்ளனர். சுமார் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 10,344 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,70,735 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 25 ஆயிரத்து 658 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
READ MORE | வெறும் 400 ரூபாயில் கோவிட்-19 பரிசோதனை: IIT Kharagpur சாதனை!!
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்....
சென்னையில் 1329 பேருக்கும், செங்கல்பட்டில் 449 பேருக்கும்,
காஞ்சிபுரத்தில் 442 பேருக்கும், விருதுநகரில் 376 பேருக்கும், திருவள்ளூரில் 385 பேருக்கும், தூத்துக்குடியில் 317 பேருக்கும், மதுரையில் 301 பேருக்கும், கோவையில் 270 பேருக்கும், குமரியில் 269 பேருக்கும், தேனியில் 235 பேருக்கும், ராணிப்பேட்டையில் 244 பேருக்கும், வேலூரில் 212 பேருக்கும், நெல்லையில் 212 பேருக்கும், திருச்சியில் 199 பேருக்கும், தஞ்சையில் 162 பேருக்கும், விழுப்புரத்தில் 157 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று சென்னையில் மட்டும் சென்னை 20 பேரும், மதுரையில் 9 பேரும், விருதுநகரில் 9 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், திருச்சியில் 6 பேரும், கோவையில் 6 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், தி.மலையில் 4 பேரும், தேனியில் 3 பேரும், திண்டுக்கல்லில் 3 பேரும், க.குறிச்சியில் 3 பேரும், புதுக்கோட்டையில் 2 பேரும், ராமநாதபுரத்தில் 2 பேரும், குமரியில் 2 பேரும், நெல்லையில் 2 பேரும், காஞ்சிபுரத்தில் 2 பேரும், தென்காசியில் ஒருவரும் என மொத்தம் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.