இந்திய அணியின் மூன்று வடிவிலான அணிகளுக்கும் முழு நேர கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டி மற்றும் ஐபிஎல் என தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த தொடரில் இருந்து பிசிசிஐ ஓய்வு கொடுத்துள்ளது. இதனால் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சென்ற அவர், அங்கு சில நாட்கள் தங்கியிருந்து விடுமுறையைக் கொண்டாடினார்.
மேலும் படிக்க | அவசரமாக ஜெர்மனி செல்லும் கே.எல்.ராகுல்
பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வந்த அவரால் கிரிக்கெட் விளையாடாமல் இருக்க முடியவில்லை. மும்பையின் வோர்லி பகுதிக்கு சென்ற அவர், அங்கு வீதியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் ஆடத்தொடங்கினார். பேட்டிங் இறங்கி இளைஞர் ஒருவர் வீசிய பந்தை மெகா சிக்சருக்கு அடித்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்திய கேப்டன் தெரு கிரிக்கெட் ஆடிய இந்த வீடியோவை பலரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர். ரோகித்சர்மாவும் சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்கா தொடரை முடித்தவுடன் இந்திய அணி, இங்கிலாந்து செல்கிறது.
Rohit Sharma playing gully cricket at Worli, Mumbai ahead of the England tour. pic.twitter.com/XeZrDL53ii
— Sanskruti Yadav (@SanskrutiYadav_) June 15, 2022
அங்கு அந்த அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருந்தாலும், அவர் ஒரு சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் ஏற்படுள்ளது. ஏனென்றால், பயிற்சியின்போது காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கே.எல்.ராகுலும் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகியிருப்பதால், புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய பொறுப்பு பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது. ரிஷப் பன்டுக்கு கேப்டன்ஷிப் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட்கோலியிடமும் தற்காலிகமாக மீண்டும் கேப்டன்ஷிப் பொறுப்பு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் விலகல்? மீண்டும் விராட் கேப்டன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR