இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நிகழும் மேஜிக்குகளில் ஒருவர் விராட் கோலி. சச்சின், தோனி எப்படி பலரும் ரோல் மாடல்களாக இருக்கிறார்களோ அதேபோல்தான் விராட் கோலியும்.
அவரது பல ஆட்டங்களில் தான் எவ்வளவு பெரிய ப்ளேயர் என்பதை உணர்த்திக்கொண்டே இருந்தார். அதனால் அவருக்கு ரன் மெஷின் என்று பெயர் கிடைத்தது.
மேலும் படிக்க | 400 ரன்கள் அடிக்குமா இங்கிலாந்து? மைக்கேல் வாகனை வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள்
இதனையடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைக்க விராட் கோலி ஒருவரால்தான் முடியும் என பலர் கூறிக்கொண்டிருக்க திடீரென ஃபார்ம் அவுட் ஆனார்.
சதம் என்பதை அசால்ட்டாக டீல் செய்த கோலி கடைசியாக 2019ஆம் ஆண்டுதான் சதம் அடித்திருந்தார். அவர் ஃபார்ம் அவுட்டிலிருந்து மீண்டுவிடுவார் என பலர் எதிர்பார்க்க அவரது சோதனைக்காலம் இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இந்த சூழலில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் கோலிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அதேசமயம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பாபர் அசாம் உள்ளிட்டோர் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Perspective pic.twitter.com/yrNZ9NVePf
— Virat Kohli (@imVkohli) July 16, 2022
இந்நிலையில், விராட் கோலி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | Mohammed Shami:‘கிரிக்கெட் ரெக்கார்டு புக்ல என் பெயரை எழுதிக்கோங்க’ ஷமியின் சாதனை
அதில் பறவையின் இரண்டு சிறகுகள் உள்ளன. அதன் அருகில் கோலி அமர்ந்திருக்கிறார். சிறகுகளுக்கு மேல், ஒருவேளை நான் கீழே விழுந்தால்? என்ற கேள்வி இருக்க, அதற்கு கீழே, ஒருவேளை நீ மேலும் மேலும் பறக்கலாம் அல்லவா? என தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் வாசகங்கள் உள்ளன. தற்போது இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ