Health Benefits, Ghee Roasted Garlic: நெய்யில் வறுத்த பூண்டை அடிக்கடி சாப்பிடுவதால் உங்களின் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதுகுறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
வீட்டு வைத்தியங்களிலும், நம் வீட்டு சமையலிலும் பூண்டிற்கு முக்கிய இடம் எப்போதும் உண்டு. அது சைவமானாலும் சரி, அசைவமானாலும் சரி பூண்டு சேர்க்காமல் உணவு தாயாரிப்பது மிகவும் குறைவு எனலாம். அப்படியிருக்க, பூண்டை நீங்கள் நெய்யில் வறுத்த பூண்டை (Ghee Roasted Garlic) சாப்பிடுவதன் மூலம் சில பிரத்யேக நன்மைகளும் கிடைக்கும்.
பூண்டில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குறிப்பாக பூண்டு (Garlic) பல்வேறு நோய்களுக்கு நிவாரணியாக வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
பூண்டில் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருக்கின்றன. பூண்டில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, மேக்னீஸ், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
நீங்கள் பூண்டை பச்சையாக சாப்பிட்டாலும், அதை சமையலில் சேர்த்தாலும் உடலுக்கு நல்லதுதான். இருப்பினும் பூண்டை நெய்யில் (Ghee) வறுத்து சாப்பிடுவதும் பல நோய்களுக்கு மருந்தாகும். நெய்யில் வறுத்த பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு காண்போம்.
அதாவது, பூண்டை அதிகமாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஓரிரு பல் பூண்டை, ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்த சாப்பிடலாம். இதனை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் அல்லது சாப்பிடுவதற்கு முன்னர் சாப்பிடலாம். அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல்நலனை அது பாதிக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்: பூண்டு மற்றும் நெய் இரண்டும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் பண்புகளை கொண்டவை. எனவே, இதை சாப்பிட்டால் நோய்களுக்கு எதிராக உங்கள் உடல் போராடும் சக்தியை பெறும். மேலும், காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற பிரச்னைகளுக்கும் இது தீர்வாக இருக்கும்.
தலைமுடிக்கும், சருமத்திற்கும் நல்லது: நெய்யில் வறுத்த பூண்டை உண்பதால் தலைமுடி சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பளபளப்பான தலைமுடியும் கிடைக்கும். மேலும், சரும ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
இதயத்திற்கு நல்லது: பூண்டில் உள்ள சல்ஃபர் மற்றும் நெய்யில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது ரத்த அழுத்தத்தை குறைத்து, கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியம் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இந்த தகவல்களை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.