Tokyo Olympics 2020: மகளிர் குத்துசண்டை போட்டியில் முதல் சுற்றில் மேரி கோம் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துசண்டை போட்டியில்  இந்தியாவின் மேரி கோம் வெற்றி பெற்றுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 25, 2021, 02:15 PM IST
Tokyo Olympics 2020: மகளிர் குத்துசண்டை போட்டியில் முதல் சுற்றில் மேரி கோம் வெற்றி title=

ஜப்பன் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு 32வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாகத் துவங்கியது. இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக, இந்தியா சார்பில் 20 பேர் மட்டுமே பங்கேற்றார்கள். இதில், 8 அதிகாரிகளும் அடங்குவர். லண்டன் ஒலிம்பிக்கில் (Tokyo Olympics) வெண்கலம் வென்ற மேரி கோம், இந்திய ஆடவர் ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோர், துவக்க விழாவில் நம் நாட்டின் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். இந்தியாவிலிருந்து மொத்தம் 71 ஆண்கள், 56 பெண்கள் என மொத்தம் 127 பேர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ALSO READ | Tokyo Olympics 2020: இந்தியாவின் பிவி சிந்து பாட்மிண்டன் முதல் சுற்றில் வெற்றி

அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளுக்கு இந்தியா சார்பில் மேரி கோம் (Mary Kom) (51 கிலோ), அமித் பங்கல் (52 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), மணிஷ் கெளசிக் (63 கிலோ), ஆஷிஷ் குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69கிலோ), லோவ்லினா பார்கோயின் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), சதீஷ் குமார் (91 கிலோ) ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். இதில், நேற்று விகாஸ் கிருஷ்ணன் ஜப்பான் நாட்டு வீரரிடம் தோல்வி அடைந்து முதல் சுற்றுடன் வெளியேறினார்.

இந்நிலையில் ஆறு முறை உலக சாம்பியனும் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் மேரி கோம். டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துசண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி இந்தியாவின் மேரி கோம் வெற்றி பெற்றுள்ளார். 

முதல் சுற்றில் வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.

ALSO READ | Tokyo Olympics 2020: இந்தியாவின் பதக்க வேட்டை துவங்கியது, வெள்ளி வென்றார் மீராபாய் சானு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News