பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
நேற்று நடைப்பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னீஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வீரர் ஜுவான் மார்ட்டினை, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
2 மணிநேரத்திற்கும் மேல் விறுவிறுப்பாக நடைப்பெற்ற இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-4, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வென்று, 11-வது முறையாக ரபேல் நடால் இறுதி போட்டிக்கு நுழைந்தார்.
Love this court, the most important in my career, these are amazing moments. Many thanks to all. Another final in Paris !!!!! #vamos
Impresionante esta pista, la más importante de mi carrera, momentos increíbles. Muchas gracias a todos! Otra final en Paris!!!!@rolandgarros pic.twitter.com/Z803HSCtVy
— Rafa Nadal (@RafaelNadal) June 8, 2018
இதனையடுத்து மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டோமினிக் தீம் வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் நாளை நடைப்பெறவுள்ள இறுதிப்போட்டியில் தரநிலையில் 7-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த டாம்னிக் தீமை ரபேல் நடால் எதிர்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.