சச்சின் காலில் விழுந்த பஞ்சாப் அணியின் பயிற்சியாளர்

சச்சின் தெண்டுல்கர் காலில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் விழுந்த வீடியோ வைரலாகியுள்ளது

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 15, 2022, 09:21 AM IST
  • மும்பை அணியை வீழ்த்திய பஞ்சாப்
  • வீரர்கள் கைக்குலுக்கும்போது நடந்த சுவாரஸ்யம்
  • சச்சின் காலில் விழுந்த பஞ்சாப் பயிற்சியாளர்
சச்சின் காலில் விழுந்த பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் title=

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த தொடர் மோசமாக தொடங்கியுள்ளது. இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாத அந்த அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைக்குலுக்கிக் கொள்ளும்போது சச்சின் மற்றும் ஜான்டிரோட்ஸ் இடையே இதயப்பூர்வமாக நிகழ்வு அரங்கேறியது. 

மேலும் படிக்க | பட்லரை பாராட்டி அஸ்வினை மறைமுகமாக சாடிய யுவராஜ் சிங்

வீரர்களும், அணி நிர்வாகிகளும் வரிசையாக கைகளை குலுக்கிக் கொண்டு செல்லும்போது ஜான்டிரோட்ஸ் திடீரென சச்சினின் காலில் விழ முயன்றார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சச்சின் நகர முயற்சித்தார். ஆனால், ஜான்டிரோட்ஸ் விடாமல் காலில் விழுந்து, பின்னர் சச்சினை ஆரத்தழுவி கொண்டார்.  இதயங்களை கவரும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயணித்த ஜான்டி ரோட்ஸ் தற்போது பஞ்சாப் அணியின் பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக உள்ளார். சச்சின் மும்பை அணியின் வழிகாட்டியாக உள்ளார்.  இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 198 ரன்கள் குவித்தது. தவான் 70 ரன்களும், மயங்க் அகர்வால் 52 ரன்களும் விளாசினர்.  199 ரன்கள் எடுத்தால் முதல் வெற்றியை பதிவு செய்யலாம் என விளையாடிய மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கேப்டன் ரோகித் சர்மா இதுவரை பெரிய இன்னிங்ஸ் விளையாடாததும், பொல்லார்டு ரன் எடுக்க தவறுவதும் அந்த அணியின் பலவீனமாக உள்ளது. அதேநேரத்தில் மிடில் ஆர்டரில் குட்டி டிவில்லியர்ஸ் என அழைக்கப்படும் பிரெவிஸ் வெளுத்து வாங்குகிறார். அவருக்கு பக்கபலமாக இன்னொரு வீரர் விளையாடாதது தோல்விக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ரூ.8.5 கோடிக்கு வாங்கிய பிளேயரை வெளியே உட்கார வைப்பதா? மும்பையை விளாசும் முன்னாள் வீரர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News