பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பிரமோத் பகத். இதுவரை இந்தியாவுக்கு பாரா ஒலிம்பிக்கில் 4-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. நான்கு தங்கம், ஏழு வெள்ளி, ஆறு வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர்.
டோக்கியோ பாராலிம்பிக்ஸின் 11 வது நாள் இதுவரை இந்தியாவிற்கு சிறந்த நாளாக இருந்து வருகிறது. ஆரம்ப முதலே ஒவ்வொரு நாளும் இந்தியாவுக்கு பத்தகங்கள் கிடைத்து வருகிறது. இன்று டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஆடவருக்கான பேட்மிண்டன் போட்டியில் பிரிட்டன் வீரரை 2-0 என்ற நேர் செட்டில் வீழ்த்தி இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்றார்.
Tokyo Paralympics: India's Pramod Bhagat wins gold medal in badminton men's singles SL3 pic.twitter.com/K0A4VEfqD6
— ANI (@ANI) September 4, 2021
இந்த பாராலிம்பிக்கில் தான் பேட்மிண்டன் போட்டியே அறிமுகம் செய்யப்பட்டது. முதல் ஆண்டிலேயே இந்தியாவிற்கு தங்கம் கிடைத்திருக்கிறது. அதற்கு காரணமாக இந்திய வீரர் பிரமோத் பகத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ALSO READ | பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை அவனி சாதனை
பாராலிம்பிக் பேட்மிண்டனில் SL3 பிரிவில் ஆடிய பிரமோத் பகத், முதல் செட்டை 14-21 என வென்றிருந்தார். இரண்டாவது செட்டில் 4-12 என பின் தங்கியிருந்தார். அதிலிருந்து மீண்டு இரண்டாவது செட்டையும் வென்று, தங்கத்தை கைபற்றினார்.
பிரமோத் பகதிற்கு 4 வயதாக இருந்தபோது போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். அவரின் பக்கத்து வீட்டுக்காரர்கள் விளையாடுவதைப் பார்த்து, தானும் விளையாட வேண்டும் என முடிவெடுத்து கடுமையாக உழைத்தார்.
2006 ஆம் ஆண்டில் பாரா பேட்மிண்டன் போட்டிக்கு முன் திறமையான வீரர்களுடன் போட்டியிட்டுள்ளார். அவர் பேட்மிண்டன் பயிற்சியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் தகுதிக்கு கவனம் செலுத்த 2019 முதல் பயிற்சி எடுத்தார்.
2019 ஆம் ஆண்டில், அர்ஜுனா விருது மற்றும் இந்தியாவில் சிறந்த விளையாட்டுக்காக பிஜு பட்நாயக் விருது பெற்றார்.உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ALSO READ | Tokyo Paralympic: மணீஷ் நர்வால், சிங்கராஜ் தங்கம் மற்றும் வெள்ளி வென்று சாதனை
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR