MS Dhoni, Chennai Super Kings: 2019ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் தோனி, மார்டின் கப்தில் த்ரோவால் ரன் அவுட்டானது ரசிகர்களுக்கு மறக்கவே முடியாத நிகழ்வாக மாறிவிட்டது. அதேபோல் இந்தாண்டு மே மாதம் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான கடைசி போட்டியின் கடைசி ஓவரில் ஒரு பெரிய சிக்ஸரை அடித்த அடுத்த பந்திலேயே, பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து தோனி வெளியேறியது ரசிகர்களின் மனதில் பலம்வாய்ந்த இடியாய் இறங்கியது எனலாம்.
அந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்ற நிலை இருந்தது. அதாவது சிஎஸ்கேவுக்கு அந்த போட்டியில் 218 ரன்கள் இலக்கு என்றாலும், 200 ரன்களை அடித்திருந்தாலே சிஎஸ்கே பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கும். ஆர்சிபி 200 ரன்களுக்குள் சிஎஸ்கேவை கட்டுபடுத்த வேண்டும் என பந்துவீசியது. கடைசி ஓவரில் தோனி ஆட்டமிழக்க சிஎஸ்கேவால் 191 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. ஆர்சிபி பிளே சுற்றுக்கு முன்னேறியது. எலிமினேட்டரிலேயே ராஜஸ்தானிடம் தோற்றது தனிக்கதை.
CSK vs RCB - சர்ச்சைகள் பல
அந்த போட்டிதான் தோனியின் கடைசி போட்டி என பலராலும் கூறப்பட்டது. 3 ஐசிசி கோப்பைகள், 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுகொடுத்த கேப்டன் ஒரு பெரிய தோல்வியுடன் ஓய்வுபெறுகிறார் என பேசப்பட்டது. மைதானத்திலேயே சிஎஸ்கே ரசிகர்களை ஆர்சிபி ரசிகர்கள் அத்துமீறி சீண்டியதாக புகார்கள் வந்தன. தோனி ஆர்சிபி வீரர்கள் யாருக்கும் கைக்குழுக்காமல் சென்றுவிட்டால் என பேசப்பட்டது. பதிலுக்கு, ஆர்சிபி வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் தோனியிடம் கைக்குழுக்காத நிலை எனவும் ஆர்சிபி தரப்பில் பேசப்பட்டது.
மேலும் படிக்க | தோனிக்கு ரூ. 4 கோடி தான்! ஆனால் ருதுராஜ்க்கு ரூ. 18 கோடி! ஐபிஎல் 2025 சம்பள விவரம்!
உறுதி செய்யப்படாத தகவல்
Sports Yatri என்ற யூ-ட்யூப் சேனலில் ஊடகவியலாளர் எனக் கூறப்படும் சுஷாந்த் மேத்தா என்பவர் அந்த வீடியோவில் பேசுகையில்,"எனக்கு பிரத்யேகமான தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. தோனி ஏன் ஆர்சிபி வீரர்களுடன் கைக்குழுக்காமல் சென்றார் என ஹர்பஜன் சிங்கிடம் கேட்டேன். அதற்கு அவர் தோனி கைக்குழுக்காமல் சென்றது மட்டுமின்றி அவர் அங்கு டிவி ஒன்றை உடைத்துள்ளார். அங்கிருந்த எதையோ ஒன்று பலமாக குத்தியுள்ளார். அந்த ஷாட்டை அடிக்காததால் அவர் மிகவும் கோபமாக இருந்துள்ளார் என ஹர்பஜன் என்னிடம் கூறினார்" என வீடியோவில் பேசி உள்ளார். ஹர்பஜன் சிங் உண்மையாகவே இதை அவரிடம் கூறினாரா இல்லையா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
— Out Of Context Cricket (@GemsOfCricket) September 29, 2024
ஆர்சிபியின் சீண்டல் பதிவு
அப்படியிருக்க ஆர்சிபி அணி அதன் X பக்கத்தில் போட்டுள்ள பதிவு ரசிகர்கள் கோபத்திற்கு ஆளாக்கி உள்ளது. அதாவது, இன்று வங்கதேசத்திற்கு இடையேயான கான்பூர் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவது தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. அத்துடன்,"இந்தியா விளையாடுவதை பார்த்து யாரும் தொலைக்காட்சியை உடைத்துவிட வேண்டாம்" என இந்த தோனி குறித்த இந்த தகவலோடு ஒப்பிட்டு பகடி செய்து பதிவிட்டுள்ளது. மேலும், Dear Neighbours என வங்கதேசத்தை குறிப்பிடவது போன்று, சென்னையை (பெங்களூருக்கு பக்கத்து மாநிலத்தில் உள்ள சென்னை) சூசகமாக குறிப்பிட்டுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
மீண்டும் தோனி வரார்...
ஏற்கெனவே, பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் ஆர்சிபி - சிஎஸ்கே ரசிகர்களின் சண்டை அதிகம் இருக்கும். இந்த சர்ச்சைக்கு பின்னர் அது இன்னும் தீவிரமடையலாம். தோனி கடந்த சீசனோடு ஓய்வை அறிவிக்கலாம் என இருந்த நிலையில், ஆர்சிபியிடம் அவர் அடைந்த தோல்வியே அவரை மற்றொரு சீசன் விளையாட தூண்டி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தோனி இன்னும் 2025 ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து இன்னும் உறுதிசெய்யவில்லை. இருப்பினும், பிசிசிஐ வெளியிட்ட விதிகளின்படி, 5 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் Uncapped வீரராக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவரை ரூ. 4 கோடிக்கு தக்கவைக்கலாம் என்கிறது. இந்த விதியின்கீழ் தோனி வெறும் ரூ.4 கோடிக்கு தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2025 மெகா ஏலம்! புதிய விதிகள் எப்படி செயல்படும்? முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ