7.30 மணிக்கு டாஸ் போட வேண்டியது, ஆனால் இன்னும் டாஸ் போடவில்லை. டாஸ் போடுவதில் கால தாமதமாக ஏற்பட்டு உள்ளது. தற்போது டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
19:05 10-04-2018
சென்னை சேப்பாக்கம் மைதானம் செல்லக்கூடிய சாலையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது மீண்டும் போலீசார் தடியடி நடத்தினர். பலர் கைது செயப்பட்டு உள்ளனர்.
18:49 10-04-2018
காவிரி உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் கவுதமன், தங்கர்பச்சன், அமீர் மற்றும் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றோர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
18:38 10-04-2018
சேப்பாக்கம் மைதானத்திற்குள் இருக்கும் ரசிகர்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறித்து உள்ளார்.
18:34 10-04-2018
கொல்கத்தா வீரர்கள் சென்னை கிண்டியில் இருந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு புறப்பட்டனர்.
18:27 10-04-2018
இது ஐபிஎல்-க்கு எதிரான போராட்டம் அல்ல; காவிரிக்காவும், தமிழகர்களுக்காவும் போராடும் போராட்டம். நீதிக்காக வீதிக்கு வந்துள்ளோம் என கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Chennai: Protest by various groups outside MA Chidambaram Stadium in Chepauk, intensifies. They are agitating against #CSKvsKKR IPL match to be held at 8 pm. Heavy Police force deployed. #CauveryManagementBoard. pic.twitter.com/eFcOIfhcAt
— ANI (@ANI) April 10, 2018
18:14 10-04-2018
இது ஐபிஎல்-க்கு எதிரான போராட்டம் அல்ல; காவிரி உரிமையை மீட்கும் போராட்டம்; போரட்டத்தை சீர்குலைக்க தீயசக்தி நுலைந்திருக்கலாம் -இயக்குநர் பாரதிராஜா
18:06 10-04-2018
சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே காவிரி உரிமைக்காக தமிழ்நாட்டுக் கொடியேந்தி முற்றுகைப் போராட்டம் செய்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த தாக்குதலில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மீது விழுந்த தடியடியால், அவர் மயக்கம் அடைந்தார்.
17:58 10-04-2018
பலத்த போலீசார் பாதுகாப்புடன் சென்னை அணி வீரர்கள் வீரர்கள் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வந்தனர்
கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், மார்ச் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதா மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மவுன போராட்டம் சாலை, ரயில் மறியல் என தொடர் போராட்டங்களை அரசியல் கட்சிகள், விவசாயா அமைப்புக்கள், இயங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடந்தி வருகின்றன. இதனால் தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.
#IPL_2018: பேனர், கொடிகளுக்கு தடை -கிரிக்கெட் மைதான நிர்வாகம்!
ஆனால் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டி காரணமாக, காவிரிக்காக நடைபெற்று வரும் போராட்டம் திசை திருப்பக்கூடும் எனக் கூறி சில அரசியல் கட்சிகள் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இன்று 8 மணிக்கு சென்னை அணி மற்றும் கோல்கத்தா அணி மோதும் போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கமாண்டோ படை மற்றும் ஆயுதப்படையை சேர்ந்த போலீசார்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் படுத்தப்பட்டு உள்ளன. மொத்தம் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். ஐபிஎல் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல்களுக்கு 5 அடுக்கு பாதுக்காப்பு போடப்பட்டு உள்ளது.
#IPL_2018: அடக்கு முறைக்கு அஞ்சி விளையாட்டை ரசிக்க போறியா..? ஜி.வி.பிரகாஷ் ட்வீட் video!!
இதனால் ஐபிஎல் போட்டி காண சேப்பாக்கம் மைதானத்துக்கு வரும் ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலில் செல்போன், பைகள், பட்டாசு, பைனாகுலர், கார் சாவிகள், கண்ணாடி பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் போன்றவை உள்ளே கொண்டுவர அனுமதி இல்லை என தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது ஐ.பி.எல் போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுக்கு செல்போன் உபயோகிக்க அனுமதி வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
IPL-2018: மைதானத்திற்குள் செல்போனுக்கு அனுமதி -சி.எஸ்.கே
இந்நிலையில், இன்று போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Chennai: Tamizhaga Vazhvurimai Katchi (TVK) workers protest outside MA Chidambaram Stadium ahead of #CSKvsKKR IPL match at 8 pm, carry balloons stating, 'We do not want IPL, we want #CauveryManagementBoard.' pic.twitter.com/5fQu11Lo78
— ANI (@ANI) April 10, 2018
தற்போது சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் டிக்கெட்களை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டுப்போட்டு போராட்டம் -தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்
அதேபோல விடுதலை சிறுத்தை கட்சியினர் திருவல்லிக்கேணியில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை வழியிலேயே கைது செய்தனர் போலீசார்.