IND vs AUS: துணை கேப்டன் பதவி பறிப்பு... கே.எல். ராகுல் குறித்து கேப்டன் ரோஹித் சொன்னது என்ன?

IND vs AUS:இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து கே.எல். ராகுல் இறக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 28, 2023, 07:24 PM IST
  • மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
  • இந்த டெஸ்ட்டை வென்றால் WTC இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறும்.
  • 2-0 என்ற கணக்கில், இந்தியா இந்த தொடரில் முன்னிலையில் உள்ளது.
IND vs AUS: துணை கேப்டன் பதவி பறிப்பு... கே.எல். ராகுல் குறித்து கேப்டன் ரோஹித் சொன்னது என்ன? title=

IND vs AUS 3rd Test: ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரிலும், ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது. பின்னர், சில ஆஸ்திரேலிய வீரர்கள் மார்ச் 31ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளனர். இதனால், அதில் சிலர் மே மாதம் வரை இந்தியாவிலேயே தங்கியிருக்க வாய்ப்புள்ளது. 

தற்போது, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. அதில், இந்தியா இரண்டு போட்டிகளையும் வென்று, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த வகையில், அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் மூன்றாவது டெஸ்ட் தொடர் மத்திய பிரதேசம் இந்தூரில் நாளை (மார்ச் 1) தொடங்க உள்ளது. 

மேலும் படிக்க | IND VS AUS: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற.. இந்தியா கட்டாயம் செய்ய வேண்டியவை!

சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் நாடு திரும்பிவிட்டதால், ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இரு அணிகளும் நாளைய போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

கில்லா... ராகுலா...?

இந்நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர்,"சுப்மன் கில், கேஎல் ராகுல் இருவரையும் பொறுத்த வரையில், அவர்கள் எந்த ஒரு ஆட்டத்திற்கு முன்பு நீண்ட நேரம் பயிற்சி மேற்கொள்கிறார்கள். எங்கள் பிளேயிங் லெவனை பொருத்தவரை, நாங்கள் அதை இன்னும் இறுதி செய்யவில்லை. நான் அதை டாஸின்போது அறிவிக்க விரும்புகிறேன். அந்த நேரத்தில் அறிவிப்பதுதான் சரியாக இருக்கும்.

அணியில் உள்ள 17 வீரர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. திறமையானவர்களை அணி எப்போதும் ஆதரிக்கும். துணை கேப்டன் பதவியை பறிப்பது என்பது பெரிய விஷயமல்ல. அந்த நேரத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதிகம் இல்லாததால் அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. எனவே, அதனை பெரிதாக கருத்தில் கொள்ள தேவையில்லை. 

ஒரு வீரருக்கு கடினம் காலகட்டம் ஏற்படும். கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் வீரர்கள் குறித்து நாம் பேசும்போது, திறமையுள்ள எவருக்கும் தங்களை நிரூபிக்க போதுமான நேரம் வழங்கப்படும். துணை கேப்டனாக இருப்பது அல்லது துணை கேப்டனாக இல்லாதது உண்மையில் எதையும் குறிக்காது" என்றார். 

மேலும் படிக்க | IPL 2023: இந்த ஆண்டும் மும்பைக்கு பெரிய இழப்பு! முக்கிய வீரர் விளையாட மாட்டார்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News