புதுடெல்லி: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரன்களை பேட்டர் குவிப்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அதிலும், சில கிரிக்கெட்டர்களுக்கு கெமிஸ்ட்ரி ஒத்துப்போய் ரன்மழை குவித்து அசத்துவார்கள். ஒரு நாள் சர்வதேச (ODI) கிரிக்கெட்டின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று, ஜோடியாக இணைந்தால் அசரடிக்கும் பேட்டர்களின் ரன்மழை ஆகும். கிரிக்கெட்டர்களின் நம்ப முடியாத கெமிஸ்ட்ரி, ரசிகர்களுக்கு ரன் விருந்து படைத்துள்ளது.
சில பேட்டிங் பார்ட்னர்ஷிப்கள் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத தருணங்களை உருவாக்கியுள்ளன. இந்தப் பட்டியலில், ODI கிரிக்கெட் வரலாற்றில், அதிக ரன்களைக் குவித்த அசாதரண இணைகளைப் பார்க்கலாம். பட்டியல் நீண்டு கொண்டே சென்றாலும், முதல் பத்து இடங்களில் உள்ள ஜோடிகள் இவர்கள்...
சச்சின் டெண்டுல்கர் - சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி, 1992 முதல் 2007 வரையில் அருமையான கெமிஸ்ட்ரியுடன் விளையாடினார்கள். 176 இன்னிங்ஸ்களில் இணைந்து விளையாடிய இந்த ஜோடி 47.55 சராசரியுடன் 8227 ரன்கள் குவித்தது. டெண்டுல்கரின் நேர்த்தியும் கங்குலியின் ஆக்ரோஷமும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்தன.
குமார் சங்கக்கார -மஹேல ஜெயவர்தன
இலங்கையின் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தனே ஜோடி 2000 முதல் 2015 வரை ஒருநாள் கிரிக்கெட்டில் 151 இன்னிங்ஸ்களில் விளையாடி 5992 ரன்கள் குவித்தது. சங்கக்காரவின் கிளாசிக்கல் பேட்டிங் பாணி ஜெயவர்த்தனேவின் நேர்த்தியான ஸ்ட்ரோக்பிளேயுடன் அழகாக இணைந்தது. இருவரும் இணைந்து, 15 சதங்களையும், 32 அரை சதங்களையும் அடித்து, இலங்கையின் ODI வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தனர்.
குமார் சங்கக்கார - திலகரத்ன டில்ஷான்
இலங்கை அணியின் குமார் சங்கக்கார, ஆக்ரோஷமான தொடக்க ஆட்டக்காரர் திலகரத்ன தில்ஷானுடன் இணைந்து 2000 முதல் 2015 வரை நீடித்த ஒரு அபாரமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். 108 இன்னிங்ஸ்களில், 53.67 என்ற சராசரியில் 5475 ரன்களைக் குவித்தது இந்த ஜோடி.
மேலும் படிக்க | ODI: 10,000 ரன்கள் கிளப்பில் அதிக பேட்ஸ்மேன்களைக் கொண்ட நாடு பட்டியலில் இந்தியாவின் இடம்
சனத் ஜயசூரிய - மார்வன் அதபத்து
இலங்கை அணியின் சனத் ஜெயசூர்யாவும், மார்வன் அதபத்துவும் 1996 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை சிறப்பான தொடக்கக் கூட்டணியை உருவாக்கினர். 144 இன்னிங்ஸ்களில் அவர்கள் 5462 ரன்களைக் குவித்தனர். ஜெயசூர்யாவின் அச்சமற்ற அணுகுமுறையும், அட்டபத்துவின் நிலைத்து விளையாடும் தன்மையும் இலங்கையின் ODI வெற்றிகளுக்கு முக்கிய பங்கு வகித்தது.
ஆடம் கில்கிறிஸ்ட் - மேத்யூ ஹைடன்
ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்யூ ஹேடனின் ஜோடி 2000 முதல் 2008 வரை அருமையாக விளையாடியது. அவர்களது பார்ட்னர்ஷிப், 117 இன்னிங்ஸ்களில் 5409 ரன்கள் எடுத்தது. கில்கிறிஸ்டின் ஆக்ரோஷமான பேட்டிங்கும், ஹெய்டனின் பவர் கேமும் இணைந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆஸ்திரேலியாவின் ஒருநாள் வெற்றிக்கு முக்கிய பங்களித்தது.
கோர்டன் க்ரீனிட்ஜ் - டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ்
கோர்டன் க்ரீனிட்ஜ் மற்றும் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஜோடி 1979 முதல் 1991 வரையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறபபன தொடக்க ஜோடியாக அமைந்தது. 103 இன்னிங்ஸ்களில், 52.58 சராசரியில் 5206 ரன்கள் குவித்த இந்த ஜோடி, 15 சதங்கள் மற்றும் 25 அரைசதங்களுடன், அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் அழியாத முத்திரையை பதித்தது.
மேலும் படிக்க | ஆசிய கோப்பை 2023: இரண்டு முறையும் டிஆர்எஸ் தவறாக எடுத்த பாகிஸ்தான் அணி
ரோஹித் சர்மா - ஷிகர் தவான்
2011 முதல் 2022 வரை இந்திய தொடக்க ஜோடியான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான், தங்களது ஆக்ரோஷமான பேட்டிங்கால் ரன்களை குவித்தனர். 117 இன்னிங்ஸ்களில் 45.15 சராசரியில் 5193 ரன்கள் குவித்த இந்த ஜோடி, ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக மாற்றியது. இந்த ஜோடி 18 சதங்கள் மற்றும் 15 அரைசதங்களை எடுத்தது.
விராட் கோலி - ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனும், துணை கேப்டனுமான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் 2010 ஆம் ஆண்டிலிருந்து ஒரு வல்லமைமிக்க ஜோடிகளாக இருந்து வருகின்றனர், அவர்களது பார்ட்னர்ஷிப் இன்றும் வலுவாக உள்ளது. 86 இன்னிங்ஸ்களில், 5008 ரன்களை 61.82 என்ற அருமையான சராசரியில் குவித்த இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப்பில் 18 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும்.
வீரேந்திர சேவாக் - சச்சின்
சச்சின் டெண்டுல்கர் வீரேந்திர சேவாக் ஜோடி, 2001 முதல் 2012 வரை இந்தியாவுக்காக ஒரு சின்னமான தொடக்க பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது. 114 இன்னிங்ஸ்களில், அவர்கள் 4387 ரன்கள் குவித்தனர். சேவாக்கின் அச்சமற்ற அணுகுமுறையும், டெண்டுல்கரின் கிளாசிக்கல் நுட்பமும் இந்த ஜோடிக்கு பிளஸ் பாயிண்ட் என்று சொல்லலாம்.
ராகுல் டிராவிட் - சவுரவ் கங்குலி
1996 முதல் 2007 வரை இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு ஜோடி சேர்ந்த ராகுல் டிராவிட்-சௌரவ் கங்குலி இணை, 88 இன்னிங்ஸ்களில் 4363 ரன்களைக் குவித்தது.
மேலும் படிக்க | குட்டி மலிங்கா போல் வந்தாச்சு அச்சுஅசலா குட்டி அக்தர் - நடை உடை அப்படியே இருக்கே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ