வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி தற்போது 20 ஓவர் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. போர்ட்ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்கியது. ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். சூர்யகுமார் யாதவ் 24 ரன்கள் எடுக்க, ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர்.
மேலும் படிக்க | டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
இக்கட்டான நிலையில் இந்திய அணி இருக்கும்போது களம் புகுந்த தினேஷ் கார்த்திக், வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிக்சருக்கும், பவுண்டரிகளுக்கும் பந்தை விரட்டிய அவர், 19 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக அஸ்வின் மறுமுனையில் 10 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டம், இந்திய அணி 190 ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தது. கடினமான வெற்றி இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 122 ரன்கள் மட்டுமே எடுக்க, 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
Dinesh Karthik is the oldest Indian to win a man of the match award in T20I. #IndvWI
— Johns. (@CricCrazyJohns) July 30, 2022
இறுதிக் கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி சிறப்பான ஸ்கோரை எட்ட உதவிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமை தினேஷ் கார்த்திக்கிடம் வந்துள்ளது.
ஹர்ஷா போக்லே, தினேஷ் கார்த்திக் குறித்து பேசும்போது, கடினமான பணியை தாமாக முன்வந்து இந்திய அணியில் அவர் ஏற்றிருக்கிறார். அதற்கேற்றார்போல் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என பாராட்டியுள்ளார். பிசிசிஐ நிர்வாகி ஒருவர், 20 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் இல்லை என்று யார் கூறியது? என கேள்வி எழுப்பியிருக்கிறார். இதன் மூலம் 20 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெறுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
மேலும் படிக்க | இந்திய அணிக்கு விரைவில் திரும்பும் சிஎஸ்கே வீரர் - அமித் மிஸ்ராவின் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ