ஐபிஎல் 2025ல் சென்னை அணியில் விளையாடப்போகும் 2 மும்பை வீரர்கள்! யார் தெரியுமா?

CSK: ஐபிஎல் 2025ல் சென்னை அணியில் விளையாடிய சிலர் மும்பை அணியிலும், மும்பை அணியில் விளையாடிய சிலர் சென்னை அணியிலும் விளையாட உள்ளனர்.

Written by - RK Spark | Last Updated : Feb 24, 2025, 10:42 AM IST
  • ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே அணி.
  • மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • மார்ச் 22ம் தேதி போட்டி தொடங்குகிறது.
ஐபிஎல் 2025ல் சென்னை அணியில் விளையாடப்போகும் 2 மும்பை வீரர்கள்! யார் தெரியுமா? title=

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். இதில் பல வீரர்கள் அணி மாறி உள்ளனர். குறிப்பாக சென்னை அணியில் விளையாடிய சிலர் மும்பை அணியிலும், மும்பை அணியில் விளையாடிய சிலர் சென்னை அணியிலும் விளையாட உள்ளனர். இதனால் இந்த ஆண்டு போட்டி சற்று சுவாரஸ்யம் அதிகமாக உள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது. மும்பை அணியில் இடம் பெற்ற இரண்டு வீரர்கள் தற்போது சென்னை அணியில் விளையாட உள்ளனர். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மேலும் படிக்க | பாகிஸ்தானில் "இந்திய தேசிய கீதம்".. ஷாக் ஆன ஆஸி வீரர்கள்.. லாகூரில் நடந்தது என்ன?

அன்ஷுல் கம்போஜ்

அன்ஷுல் கம்போஜ் ஐபிஎல் 2024ல் மும்பை அணிக்காக ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஆனாலும் விளையாடிய போட்டிகளில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். ஐபிஎல்லை தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இதன் மூலம் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார். அவரின் தொடர்ச்சியான ஆட்டங்களை பார்த்து மும்பை அணி மீண்டும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னை அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் தேவைப்படுவதால் அன்ஷுல் கம்போஜ் நிச்சயம் பிளேயிங் 11ல் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. உயரமான வேகப்பந்து வீச்சாளர் என்பதால் எளிதில் விக்கெட்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளார்.

ஷ்ரேயாஸ் கோபால்

ஐபிஎல் 2025ல் சென்னை அணிக்காக விளையாடப்போகும் மற்றொரு மும்பை அணியின் வீரர் ஷ்ரேயாஸ் கோபால். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஷ்ரேயாஸ் கோபால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இரண்டு முறை விளையாடியுள்ளார். ஐபிஎல் 2025 ஏலத்தில் சென்னை அணி இவரை எடுத்துள்ளது. தற்போது சென்னை அணியில் அஸ்வின், ஜடேஜா, நூர் அகமது உள்ள நிலையில், ஒரு பேக்கப் ஸ்பின்னராக ஷ்ரேயாஸ் கோபால் செயல்படுவார். பவுலிங்கை தாண்டி பேட்டிங்கிலும் இவரால் அணிக்கு பலம் சேர்க்க முடியும் என்பதால் சென்னை அணி இவரை நிச்சயம் ஏதாவது ஒரு போட்டியில் பிளேயிங் 11ல் எடுக்கலாம்.

ஐபிஎல் 2025க்கான சிஎஸ்கே அணி

ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், ஆண்ட்ரே சித்தார்த், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், விஜய் சங்கர், சாம் கர்ரன், ராமகிருஷ்ண கோஷ், ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, எம்.எஸ். தோனி, டெவோன் கான்வே, வான்ஷ் பேடி, மதீஷா பத்திரனா, முகேல்தன் அஹ்மத், கலீல்தன் அஹ்மத் அன்ஷுல் கம்போஜ், கமலேஷ் நாகர்கோடி, குர்ஜப்னீத் சிங், ஆர் அஷ்வின், நூர் அகமது, ஷ்ரேயாஸ் கோபால்.

மேலும் படிக்க | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News