அட்சய திருதியை 2023: இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகுவது கேரண்டி

Akshaya Tritiya 2023: இந்த முறை அட்சய திருதியை ஏப்ரல் 22 சனிக்கிழமை வருகிறது. இந்த நாளில் குருவும் மேஷ ராசியில்  பெயர்ச்சியடைகிறார். இத்தகைய அற்புத நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் எப்போதும் செல்வமும், செழிப்பும் இருந்துக்கொண்டே இருக்கும். ஆனால் அதற்கான உகந்த நேரத்தை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 11, 2023, 01:00 PM IST
  • அட்சய திருதியை 22 ஏப்ரல் 2023 சனிக்கிழமை.
  • அட்சய திருதியையில் நகை வாங்க உகந்த நேரம் என்ன.
  • பானகம், நீர்மோர், அன்னம் போன்றவற்றை தானம் செய்யலாம்.
அட்சய திருதியை 2023: இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகுவது கேரண்டி  title=

அட்சய திருதியை 2023: இந்த ஆண்டு அட்சய திருதியை 22 ஏப்ரல் 2023, சனிக்கிழமை வருகிறது. சித்திரை மாதம் அல்லது வைஷாக மாதத்தின் சுக்ல பட்சம் 14 வது நாளில் அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத, தொடர கூடியது என்று பொருள். 15 திதிகளில் மூன்றாவதாக வரும் திதி திரிதியை. அட்சய திருதியை நாள் மிக முக்கியமான மங்கலகரமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தங்க நகை, வெள்ளி நகை, தங்க காசு, வெள்ளி காசு என ஏதாவது ஒரு பொருளை வாங்கி சேர்க்க வேண்டும் என்பது ஜோதிட ஐதீகம். மறுபுறம் இந்த ஆண்டு இதே நாளில் குருவும் மேஷ ராசியில்  பெயர்ச்சியடைகிறார். இத்தகைய அற்புத நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் எப்போதும் செல்வமும், செழிப்பும் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் அட்சய திருதியையில் நகை வாங்க உகந்த நேரம் எது என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

அட்சய திருதியை சுப நேரம்
அட்சய திருதியை 22 ஏப்ரல் 2023 சனிக்கிழமை
அட்சய திருதியை பூஜைக்கு உகந்த நேரம் காலை 07:49 முதல் மதியம் 12:20 வரை.
திரிதியை - 22 ஏப்ரல் 2023 காலை 07:49 முதல் தொடங்கி,
திரிதியை - 23 ஏப்ரல் 2023 காலை 07:47 முடிவடைகிறது.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - இந்த 3 ராசிகள் ஜாக்கிரதை!

அட்சய திருதியையில் நகை வாங்க உகந்த நேரம்:
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதற்கான நேரம் ஏப்ரல் 22, 2023 காலை 07.49 மணி முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 05.48 மணி வரை இருக்கும். தங்கம் வாங்குவதற்கான மொத்த காலம் 21 மணி 59 நிமிடங்கள் வரை தங்கம் வாங்கலாம்.

தானம் தர வேண்டிய நாள்..தானத்தில் என்ன கொடுக்கலாம்
அட்சய திரிதியை நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்கி, இல்லாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் தானமாக வழங்க வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் எல்லோருக்கும் அதற்கு வசதி கிடையாது என்பதால் இந்த நாளில் அரிசி, பருப்பு, கோதுமை, பானகம், நீர்மோர், அன்னம் போன்றவற்றை தானம் செய்யலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு - புதன் சேர்க்கையால் வந்தாச்சு ஜாக்பாட்..! இந்த ராசிக்காரர்கள் இனி லட்சாதிபதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News