நடிகரை பளாரென அறைந்த பெண்! படத்தில் நடித்தது ஒரு குத்தமா? வைரல் வீடியோ..

Viral Video Of Actor NT Ramaswamy : தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக விளங்கும் என்.டி.ராமஸ்வாமி எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணின் கையால் அறை வாங்கிய சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Oct 25, 2024, 07:34 PM IST
  • வில்லனாக நடித்தது ஒரு குத்தமா?
  • நடிகரை அறைந்த பெண்
  • வைரலாகும் வீடியோ..
நடிகரை பளாரென அறைந்த பெண்! படத்தில் நடித்தது ஒரு குத்தமா? வைரல் வீடியோ.. title=

Viral Video Of Actor NT Ramaswamy : தெலுங்கில், பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வர்ஜ்பவர் என்.டி.ராமஸ்வாமி. இவர் நடித்திருக்கும் லவ் ரெட்டி திரைப்படம் கடந்த 18ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் என்.டி.ராமஸ்வாமி வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் தியேட்டர் விசிட் சமீபத்த்லி நடைப்பெற்றது. ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு தியேட்டரில் விசிட்டிற்கு சென்ற இவர்கள், அங்கிருக்கும் ரசிகர்களுடன் கலந்துரையாடும் நோக்கில் சென்றனர். அங்குதான் படக்குழுவினர் எதிர்பாராத சம்பவம் நடைப்பெற்றிருக்கிறாது. 

வைரல் வீடியோ:

லவ் ரெட்டி திரைப்படம் முடிந்த பிறகு, அங்கிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி சொல்வதற்காக படக்குழுவினர் மேடை மீது ஏறி நின்று கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு பெண்மணி, அப்படத்தில் வில்லனாக நடித்திருந்த என்.டி.ராமஸ்வாமியை சட்டையை பிடித்து பளார் பளார் என கண்ணத்தில் அறைந்தார். சுற்றி இருப்பவர்கள் எவ்வளவோ தடுத்தும், அவர் மீண்டும் மீண்டும் அவரை தாக்குவதற்காக வந்தார். அப்படி வருகையில், “அந்த காதல் ஜோடியை ஏன் அப்படி சித்ரவதை செய்தாய்?” என மீண்டும் மீண்டும் கேட்டு அடித்தாராம். 

இதையடுத்து ஒரு வழியாக அடித்த பெண்மணியை அனைவரும் கட்டுப்படுத்தினர். பின்னர், அங்கிருந்த தியேட்டர் காவலாளர்கள் அந்த பெண்ணை வெளியே கொண்டு சென்றிருக்கின்றனர். படத்தில் வில்லனாக நடித்த அவர், தனது கதாப்பாத்திரத்தின் படி அந்த காதலர்களுக்கு வில்லனாக நடந்து கொண்டார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண்மணி அவரை ஓடி வந்து அடித்திருக்கிறார். 
ப்ரமோஷனாக இருக்குமோ?
 
பலர், இது படக்குழுவே படத்தை பிரபலப்படுத்துவதற்காக செய்த சம்பவமாக இருக்கலாம் என கூறி வருகின்றனர். பலர், தங்களின் படங்கள் சரியாக ஓடவில்லை என்றால் இது போன்ற சர்ச்சைக்குரிய சம்பவங்களை செய்து விட்டு, தங்கள் படத்தை பற்றி நான்கு பேர் பேச வேண்டும், பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஒரு பக்கம் ரசிகர்கள் இப்படி யோசிக்க, இன்னொரு பக்கம் இது உண்மையாக நடந்த சம்பவமாக இருக்கலாம் என்றும், அந்த பெண் தாக்க வரும் போது அடி வாங்கிய நடிகர் அதிர்ச்சி அடைந்தது பொய்யாக தெரியவில்லை என்றும் கூறி வருகின்றனர். அந்த பெண்மணி நடிகரை அறைந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News