காதலர்களுக்குள் இருக்கவே கூடாத 8 கெட்ட விஷயங்கள்!!

காதலர்கள் அல்லது திருமணம் ஆன தம்பதிகளுக்குள் சில விஷயங்கள் இடைஞ்சலாக இருக்கவே கூடாது. அவை என்னென்ன தெரியுமா? 

இன்றைய உலகில், பலருக்கு காதலிக்க தெரியவில்லை, சிலருக்கு காதல் என்றால் என்னவென்றே தெரியவில்லை. இதனால் பலருக்கு காதலோ திருமண உறவோ கைக்கொடுக்காமலேயே போய் விடுகிறது. எனவே, தம்பதிகளுக்குள் இருக்கவே கூடாத சில விஷயங்கள் பற்றி இங்கு பார்ப்போம். 

1 /8

சண்டையை தவிர்ப்பது: சண்டை வந்தால், அதை அப்படியே கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது. அதை தவிர்த்து விட்டு செல்வதால், அத் உ வருங்காலத்தில் பெரிதாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. 

2 /8

பேசுவதை தவிர்ப்பது:   கணவன் மனைவி அல்லது காதலர்களுக்குள் சண்டை வரும் போது இருவரும் அது குறித்து பேசி, அதை முடிக்க வேண்டும். அதற்கு பதிலாக பேசாமல் தவிர்த்து வந்தால் கண்டிப்பாக அதுவும் ஒரு நாள் பெரிதாக விஸ்வரூபம் எடுக்கும்.

3 /8

ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது: தம்பதிகள் இருவருமே தொழில் ரீதியாக அல்லது தனிப்பட்ட ரீதியாக வளரும் போது ஒருவரை ஒருவர் உயர்த்த ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

4 /8

நம்பிக்கை இல்லாமல் இருப்பது:   ஒரு உறவு வளர அதற்கு அடிப்படையாக தேவைப்படுவது, நம்பிக்கை. இந்த நம்பிக்கையை இருவரும் காப்பாற்ற வேண்டும். நம்பகத்தன்மையை கெடுத்துக்கொள்ளும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.

5 /8

பொறாமை:   பொறாமை, ஒரு அளவை மிஞ்சினால் அது டாக்ஸிக் ஆக மாறி விடும். எனவே இது குறித்த புரிதலும் இருவருக்குள்ளும் இருக்க வேண்டும்.

6 /8

மரியாதையற்ற தன்மை: இருவரும் தம்பதிகள் என்றாலும், இருவருமே இருவர் மீதும் தனிப்பட்ட ரீதியாக மரியாதை வைத்திருக்க வேண்டும். மரியாதை இல்லாமல் நடந்து கொள்ள கூடாது. 

7 /8

நேர்மையின்மை: வாழ்வில் அனைவரையும், அனைத்து இடங்களிலும் நேர்மையுடன் அணுக வேண்டும். அதையே உங்கள் ரிலேஷன்ஷிப்பிலும் பின்பற்ற வேண்டும். 

8 /8

கட்டுப்படுத்தும் நோக்கம்: நீங்கள் இருவருமே தனித்தனி மனிதர்கள். இருவரும் ஒவ்வொருவர் நடத்தையை கண்காணிக்க அல்லது கட்டுப்படுத்த முயற்சி செய்யக்கூடாது.