நாயை விரட்டப்போய் உயிரை விட்ட இளைஞர்!! இதயத்தை நிறுத்தும் வைரல் வீடியோ

Hyderabad Youngster Chasing Dog And Dies Viral Video : ஒரு இளைஞர், நாயை துரத்த சென்று கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த வீடியோ, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Oct 22, 2024, 07:06 PM IST
  • நாயை துரத்த போய் கீழே விழுந்த இளைஞர்!!
  • நண்பனின் பிறந்தநாள் விழாவில் நடந்த சோகம்..
  • பதைப்பதைக்க வைக்கும் வைரல் வீடியோ..!
நாயை விரட்டப்போய் உயிரை விட்ட இளைஞர்!! இதயத்தை நிறுத்தும் வைரல் வீடியோ title=

Hyderabad Youngster Chasing Dog And Dies Viral Video : இணையத்தில் வைரலாகும் சில வீடியோக்கள், பல நேரங்களில் நம் இதயத்தையே கணக்க வைக்கும் வகையில் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நண்பனின் பிறந்தநாள் கொண்டாட சென்ற அந்த இளைஞர், எதிர்பாராத விதமாக கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்தது எப்படி? இதொ அது குறித்து பார்ப்போம். 

இளைஞர் உயிரிழப்பு:

ஐதராபாத்தில் இருக்கும் சந்தன் நகரில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரை விட்டிருக்கிறார் உதய் குமார். 22 வயது இளைஞரான இவர், பெயிண்டர் வேலை செய்து வருகிறார். ஜோதி நகரை சேர்ந்த இவர், சம்பவம் நடந்த தினமான அக்டோபர் 20-21ஆம் தேதி இரவு நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக விவி ப்ரைட் ஹோட்டலுக்கு சென்றிருக்கிறார். 

வைரல் வீடியோ:

இளைஞரின் உயிரிழப்புக்கு பிறகு, அவர் அந்த ஹோட்டலின் 3வது மாடியில் இருந்து தவறி விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. முதலில், ஹோட்டல் லாபியில் ஒரு நாய் இருக்கிறது. இதை பார்த்த பின்பு அதன் பின்னாலேயே துரத்திக்கொண்டு ஓடும் அவர் வேகமாக ஓடியதால் நிற்க முடியாமல் நிலை தடுமாறி ஹோட்டலின் ஜன்னல் வழியாக கீழே விழுந்துவிடுகிறார். 

அவர் துரத்தி வந்த நாய் அப்படியே வேறு பக்கம் சென்று விடுகிறது. இதையடுத்து, அவர் விழுந்ததை பார்த்த அவரது நண்பர்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது சோகத்தையும் அதிர்ச்சியைும் ஏற்படுத்தியிருக்கிறது. 

போலீஸார் விசாரணை:

நடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். தற்போது நடைப்பெற்றிருக்கும் விசாரணையின்படி, உயிரிழந்த நபர் 12:30 மணியளவில் ஒரு நாயை ஹோட்டல் லாபியில் பார்த்துவிட்டு அதனுடன் விளையாட வெளியில் சென்றிருகிறார். அப்போது அதன் பின்னாலேயே ஓடும் போதுதான் இந்த கோர சம்பவம் நடைப்பெற்றிருக்கிறது. 

சம்பவம் நடந்த ஹோட்டல், கூகுளில் 3.5 ஸ்டார் ரேட்டிங் பெற்று, தங்கியிருந்தவர்களின் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. தற்போது 22 வயது இளைஞர் உயிரிழந்திருப்பது, ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கேள்வி பட்டவர்கள், இணையத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து தங்களது சோகத்தினை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | 12வது மாடியில் குதிக்க பார்த்த இளைஞர்!! திக் திக் வைரல் வீடியோ..

மேலும் படிக்க | தடவிக்கொடுக்க வந்தவரை தாவிப்பிடித்த பெண் சிங்கம்!! பதைபதைக்க வைக்கும் வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News