உருண்டு புரண்டு டான்ஸ் ஆடி சூப்பராய் வீடியோ எடுக்கும் சூப்பர் சிறுவன்

சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமானவை. விலங்குகளின் குறும்பு வீடியோ ரசிக்க வைக்கிறது என்றால், சுட்டிகளின் சூப்பர் வீடியோக்களும் இணையத்தைக் கலக்குகின்றன.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 26, 2022, 09:33 PM IST
உருண்டு புரண்டு டான்ஸ் ஆடி சூப்பராய் வீடியோ எடுக்கும் சூப்பர் சிறுவன் title=

சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமானவை. விலங்குகளின் குறும்பு வீடியோ ரசிக்க வைக்கிறது என்றால், சுட்டிகளின் சூப்பர் வீடியோக்களும் இணையத்தைக் கலக்குகின்றன.

வீடியோவை எடுப்பதில் ஒரு சிறுவனின் அர்ப்பணிப்பைக் காட்டும் ஒரு சூப்பர் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இந்த வீடியோ பார்க்கும்போதே உங்களை அறியாமல் சிரிப்பீர்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பது பெரியவர்களுக்கு சரி தான். ஆனால் இந்த சிறுவன் தனது அருமையான வீடியோ எடுக்கும் திறமையால் ஹெவி கேமராமேன் என்று பெயர் வாங்கிவிட்டான்.

தரையில் உருண்டு புரண்டு, எடுக்கும் காட்சிக்கு ஏற்ப ஆடியும், குனிந்தும் வீடியோ எடுப்பது பார்க்கும்போதே சிரிப்பை வரவழைக்கிறது.

மேலும் படிக்க | வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா ஆனா அதுக்குன்னு இப்படியா

வீடியோவை சரியாக படமெடுக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு அனைத்து வழிகளிலும் செல்கிறார். சரியான ஒளி, கோணம் மற்றும் முன்னோக்கு தேவைப்படுவதால், சரியான ஷாட்டை எடுப்பது எளிதானது அல்ல.

பெரும்பாலும் திருமணங்களின் போது, ​​பல புகைப்படக்காரர்கள் மற்றும் வீடியோகிராஃபர்களை நாம் சந்தித்திருக்கிறோம், அவர்கள் சிறந்த ஷாட்டைப் பிடிக்க எல்லா வழிகளையும் கையால்வார்கள்.

சாலையில் படுத்துக்கொண்டும், தண்ணீருக்குள் இறங்கியும், மரத்தில் ஏறியும் என எதையும் விட்டுவைக்காமல், அருமையான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் பதிவு செய்தவர்களின் படைப்புகள், விருதுகளையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | கூண்டுக்குள்ள இருந்தாலும் நான் தான் ராஜா

இதுபோன்ற ஒரு வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது, இது ஒரு சிறுவன் சரியான வீடியோவைப் பிடிக்க தீவிர முயற்சி எடுப்பதைக் காட்டுகிறது. 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahul Ekka (@ekkarahul_dj)

 

அந்த சிறுவன் எடுத்த வீடியோவை பார்க்க முடியாவிட்டாலும், வீடியோ எடுக்கும் வீடியோவை பார்க்க முடிகிறது. வளர்ந்து வரும் கேமராமேன் என்பது இந்த சிறுவனின் செயல்களை பார்க்கும் அனைவரும் சொல்வார்கள்.

விழாவில் நடனமாடுபவர்களை வீடியோ எடுக்க முயலும் இந்த சிறுவன், பலரும் தன்னைப் பார்த்து சிரிப்பதை பொருட்படுத்துவதில்லை.  

இந்த வீடியோ வைரலாகி வருகிறது, சிறுவனின் அர்ப்பணிப்பைக் கண்டு மக்கள் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சிலர் அவரது திறமையைப் பாராட்டினர், மற்றவர்கள் நகைச்சுவையாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | எலோன் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்; மஸ்க் பதிவு செய்த முதல் ட்வீட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News