Viral Video: கோழியிடம் அடைக்கலம் புகுந்த நாய் குட்டி! அன்புடன் அரவணைக்கும் கோழி!

தாய்மை என்பது தன் குட்டிகளை காப்பது மட்டுமல்ல... அனைத்து உயிரினங்களிலும் அன்பு செலுத்தி காப்பது தான் தாய்மை என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, இணையவாசிகளின் மனதை நெகிழ வைத்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 9, 2023, 04:26 PM IST
Viral Video: கோழியிடம் அடைக்கலம் புகுந்த நாய் குட்டி! அன்புடன் அரவணைக்கும் கோழி! title=

குழந்தைகளின் தேவைகளை கவனித்து நிறைவேற்றுவதில், தாயை மிஞ்ச எவரும் இல்லை. தாயிற் சிறத கோவில் இல்லை என்ற முன்னோர்கள் கூற கேட்டிருக்கிறோம். நாம் பல வகையில் சண்டையிட்டாலும், வாக்குவாதம் செய்தாலும், வாதிட்டாலும், அந்த அன்பு கொஞ்சம் கூட குறையாது. தாய்மார்கள் தங்கள் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தங்கள் குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதிலும், பாதுகாப்பு வழங்குவதிலும் தாயின் அக்கறையை வேறு எவராலும் ஈடு செய்ய முடியாது. இந்த குணங்களை மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்குகளிடமும் காணலாம். குட்டிகள் தங்கள் தாயின் நிழலைத் தேடி அடைக்கலம் வீடியோக்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். 

அப்படி ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. தாய்மை என்பது தன் குட்டிகளை காப்பது மட்டுமல்ல... அனைத்து உயிரினங்களிலும் அன்பு செலுத்தி காப்பது தான் தாய்மை என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, இணையவாசிகளின் மனதை நெகிழ வைத்துள்ளது. கோழியிடம் அடைக்கலம தேடி ஓடும் நாய்க்குட்டியை கோழி அன்புடன் தன்னிடம் சேர்த்துக் கொள்கிறது. குளிரைத் தாங்க முடியாமல் நாய்க்குட்டி அரவணைப்பைத் தேடி ஓடுகிறது. தாய் கோழி தான் இட்ட முட்டைகளை அடைக்காத்து, குஞ்சுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், நாய் குட்டியையும் தன் சிறகுகளில் அனைத்துக் கொள்கிறது. நாய்க்குட்டி இறக்கைக்குள் பாதுகாப்பாக அமர்ந்திருப்பதையும் வீடியோவில் காணலாம்.

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

 

 

இந்த வீடியோவை ஸ்வப்னில் குப்தா தனது  ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை 17.3 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். 33 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவை பார்த்து பலம் நெஞ்சம் நெகிழ்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கோழியின் தாயன்பை நினைத்து வியந்து பலர் விரும்பி கருத்து தெரிவித்து வருகின்றனர். தாய்மை என்ற தலைப்புடன் வீடியோ பகிரப்பட்டது. நாய்ப் குட்டியும் தனது அன்பையையும் நன்றி உணர்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில், அதனை தனது நாக்கினால் நக்கி கோழிக்கு நன்றி தெரிவிக்கிறது.

Trending News