இரண்டடி தூரத்தில ரெண்டு புலி! 22 அடி உயரத்திற்கு துள்ளி குதிக்கும் புலியின் இரை ‘கேட்ச்’ வீடியோ வைரல்!

Tiger Trending Video : காட்டு விலங்குகள் தொடர்பான உண்மைகளை உரக்கச் சொல்லும் வீடியோக்கள் வெளியானவுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகின்றன. அதிலும் இதுபோன்ற திகிலூட்டும் வீடியோக்களுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம் தான்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 15, 2024, 09:51 AM IST
  • புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது!
  • இறைச்சியை கேட்ச் பண்ண ஹைஜம்ப் செய்யும் புலி
  • வைரலாகும் இறைச்சி கேட்ச் செய்யும் புலி
இரண்டடி தூரத்தில ரெண்டு புலி! 22 அடி உயரத்திற்கு துள்ளி குதிக்கும் புலியின் இரை ‘கேட்ச்’ வீடியோ வைரல்! title=

Viral Video Of Wild Animals : சிங்கங்கள் காட்டுக்கு அரசன் என்றால், புலிகள் மட்டும் குறைந்ததா என்ன? புலியிடம் சிக்கினால் சின்னாபின்னமாகிவிட வேண்டும் என்ற பயம், புலி என்ற பெயரைக் கேட்டாலே நடுநடுங்க வைக்கும். காட்டு வழியாக செல்பவர்கள், உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்வதற்கு காரணமும் சிங்கம், புலி போன்ற விலங்குகள் தான். காட்டு விலங்குகளை பார்த்தால் வெலவெலத்துப் போன காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது.

அடங்காப்பிடாரிகளையும் அடக்க புலி வருது என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். இன்று உண்மையிலே புலி வருது என்று சொன்னாலும், எந்த வீடியோவில் என்று கேட்கும் அளவுக்கு, அபூர்வமாய் காணக்கூடிய விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பதிவேற்றப்பட்டு வைரலாகின்றன.

விலங்குகளின் வாழ்விடத்திற்குள் மனிதர்களின் ஊடுருவல் அதிகரித்துவிட்ட நிலையில், அவற்றிற்கென கட்டுப்பாடுகள் விதித்து வேலி போட்டு நாம் அவற்றை நெருங்கி பார்க்கும் காலம் இது. தானாக சென்று சுயமாக வேட்டையாடி உணவுண்ட விலங்குகள் தற்போது, இரையை மனிதர்கள் கொடுத்தால் அதை ஆர்வமாக உண்ணும் நிலையை நாம் உருவாக்கிவிட்டோம்.

அப்படியொரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது. இந்த வீடியோவில், அச்சமில்லாமல் புலிக்கு அருகில் இருக்கும் மனிதர்களை காட்டுகிறது. ஜீப்பில் நிற்கும் மனிதர்கள் இரண்டடி இடைவெளியில் இரு புலிகளை போட்டோ எடுப்பதும், புலிகள் கர்ஜிக்காமல், மனிதர்களையே பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிகிறது.

மேலும் படிக்க | மூச்சுவிடும் பூமி... இணையத்தில் வைரலாகும் அதிசய வீடியோ: மிஸ் பண்ணாம பாருங்க

என்ன இரண்டடி தூரத்தில் இரு புலிகள் இருந்தால், எப்படி படமெடுக்க முடியும் என்ற கேள்வி எழுகிறதா? இரண்டடிக்கு நடுவில் ஒரு வேலி இருந்தால் பயம் காணாமல் போய்விடாதா என்ன? வீடியோ வைரலாவதற்கு காரணம் வேலியல்ல. ஜீப்பில் இருந்து மேலே தூக்கிப் போடப்படும் இறைச்சி தான் வீடியோ பலராலும் ரசிக்கப்படுவதற்கான காரணமாக மாறியிருக்கிறது.

புலி என்றால் மனிதர்களுக்கு மட்டுமன்றி மிருகங்களுக்கும் பயம் என்ற நிலை மாறிவிட்டது என்பதை உறுதி செய்யும் வீடியோ இது. இந்த வீடியோவை பாருங்கள்...

ஹைஜம்ப் செய்யும் புலி

ஜீப்பில் இருப்பவர்களை சாவகாசமாக பார்த்துக் கொண்டிருக்கும் புலிகளில் ஒன்று, தீடிரென மேலே பறக்கும் இறைச்சியைப் பார்த்துவிடுகிறது. இந்த இறைச்சியை ஜீப்பில் உள்ள ஒருவர் வீசி எறிகிறார். பறக்கும் இறைச்சியைப் பார்க்கும் புலிக்கு எவ்வளவு பசியோ தெரியவில்லை. அது பாய்ந்து ஹைஜம்ப் செய்து உணவை வாயால் ‘கேட்ச்’ செய்துவிட்டு கீழே இறங்கியதும், காட்டுக்குள் ஓடிவிடுகிறது.

புலியால் இவ்வளவு கச்சிதமாக துள்ளி குதித்து கீழே இறங்க முடியுமா என்பது ஆச்சரியமாக உள்ளது. பசி வந்தால் பத்தும் பறக்கும் என்ற பழமொழி இங்கு உதாவாது. ஆனால், உணவு என்பது மனிதர்களானாலும், விலங்குகள் ஆனாலும் அடிப்படை தேவை என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. எஞ்சிய மற்றொரு புலியோ, எப்படியும் தனக்கும் ஒரு துண்டு இறைச்சி கிடைக்கும் என்பது போல மீண்டும் வேலிக்கு அருகில் வருகிறது.

இதுபோல், காட்டு விலங்குகள் தொடர்பான உண்மைகளை உரக்கச் சொல்லும் வீடியோக்கள் வெளியானவுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகின்றன. அதிலும் திகிலூட்டும் காட்சிகளும் கூடிய வீடியோக்களை பலரும் பார்த்து பரவசப்படுகின்றனர்.  

மேலும் படிக்க | காட்டுக்கு ராஜான்னாலும் கட்டுப்பாடு இருக்குல்ல! யானையின் குரலுக்குக் கட்டுப்படும் ராஜா குடும்பம் வீடியோ வைரல்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News