எவன்டா அவன் காதை கடிக்கிறது.. வைரலாகும் பூனையின் ரியாக்சன்!

அமைதியாக அசதியில் படுத்துக்கொண்டிருக்கும் பூனையை செம்மறி ஆட்டுக்கூட்டங்கள் தூங்கவிடாமல் தொந்தரவு செய்து அதனை எழுப்பிவிடும் காட்சி சிரிப்பை வரவழைக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 31, 2022, 09:31 AM IST
  • அமைதியாக தூங்கி கொண்டிருக்கும் பூனை.
  • கூட்டமாக ஆடுகள் வந்து தொந்தரவு செய்கின்றன.
  • இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
எவன்டா அவன் காதை கடிக்கிறது.. வைரலாகும் பூனையின் ரியாக்சன்! title=

சமீபகாலமாக பூனைகள் மொக்கை வாங்கும் காட்சிகள் இணையத்தில் அதிகமாக பரவி நம்மை சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.  பெரும்பாலான வீடுகளில் வளர்ப்பு பிராணிகள் என்றாலே நாய் தான் முதலில் நமது நினைவுக்கு வரும், ஆனால் இப்போது பூனைகளும் நினைவுக்கு வரும். ஏனென்றால் பலரது வீடுகளிலும் வளர்ப்பு பிராணிகளாக நாய்களை டாமினேட் செய்து பூனைகள் வளர தொடங்கிவிட்டன.  பூனைகள் செய்யும் குறும்புத்தனங்களும், அவை வாங்கும் பல்புகளும் நம்மை ஒருபோதும் மகிழ்விக்க தவறியதில்லை.  இப்போதும் ஒரு பூனையின் நகைச்சுவை வீடியோவை தான் பார்த்து ரசிக்க போகிறோம், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பூனையை தூங்கவிடாமல் செம்மறி ஆடுகள் தொந்தரவு செய்துகொண்டு இருக்கிறது, இந்த காட்சி பலரையும் கவர்ந்துள்ளது.

மேலும் படிக்க | கரும்பு லாரியா? ஒரு டோக்கன் போட்டுட்டு போ..! யானையின் குறும்பு வீடியோ வைரல்! 

பூனையின் வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது, அந்த வீடியோவில் ஆட்டு மந்தைக்குள் வைக்கப்பட்டுள்ள ஒரு தொட்டிக்குள் பழுப்பு நிறத்தில் பூனை ஒன்று அசதியில் அமைதியாக உறங்கிக்கொண்டு இருக்கின்றது.  அப்போது அதனருகில் செம்மறி ஆட்டுக்குட்டிகள் சில வந்து அங்கு கிடக்கும் வைக்கோலை மேய்ந்துகொண்டு இருக்கின்றது, வைக்கோலை மேய்ந்து கொண்டிருந்த செம்மறி ஆடுகள் திடீரென்று அமைதியாக படித்திருக்கும் பூனையிடம் வான்டடாக சென்று வம்பு இழுக்கின்றன.  அப்போது ஒரு செம்மறி ஆடு பூனையின் காதை மெதுவாக கடிக்க ஆரம்பித்ததும், தூக்கத்திலிருந்து விழித்த பூனை திடீரென்று கடுப்பாகி அந்த செம்மறி ஆட்டை தனது கைகளை நீட்டி பிடிக்க முயல்கிறது, பின்னர் அப்படியே ஒவ்வொரு ஆடுகளையும் தள்ளிவிட முயற்சி செய்வதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.

 

தான் உண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக இருந்த பூனையை, செம்மறி ஆட்டு கூட்டங்கள் இப்படி வம்பிழுக்கும் காட்சி இணையவாசிகளை பெரிதும் கவர்ந்திருக்கிறது.  இணையத்தில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோ இதுவரை எழுபத்தி மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.  மேலும் இந்த வீடியோவிற்கு பல லைக்குகளும், கமெண்டுகளை குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News