இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனியின் பாணியில் ஆப்கான் வீரர் ரஷித் கான் ஹெலிகாப்டர் ஷாட் அடித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!
ஒருநாள் போட்டிகளில் மிக குறைந்த போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை கடந்த வீரர் என்னும் பெருமையினை படைத்தவர் ஆப்கானிஷ்தான் ஆல்ரவுண்டர் ரஷித் கான். 20 வயது ஆகும் ரஷித் கான் ICC தரவரிசையின் ஆல்ரவுண்டர் பட்டியலில் முதல் இடம் வகித்து வருபவர்.
சமீபத்தில் நடைப்பெற்ற IPL போட்டிகளின் மூலம் இந்தியர்களின் மனதை கொல்லை கொண்டவர். இவர் தற்போது துபாயில் நடைப்பெற்று வரும் T10 லீகில், மராதா அரேபின்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற போட்டி ஒன்றில் டோனி பாணியில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்துள்ளார்.
Helicopters #Inventer @msdhoni Bha @T10League @MarathaArabians pic.twitter.com/DH8RdfUnYA
— Rashid Khan (@rashidkhan_19) November 29, 2018
இந்த வீடியோவினை அவர் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக டோனிக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த பதிவில் ஹெலிகாப்டர் ஷாட் அறிமுக நாயகனே என டோனியினை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
ரஷித் கான் ஆட்டத்தினை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ரிஷப் பண்ட், டாம் மூடி ஆகியோரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.