Suriya 45: சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் RJ பாலாஜி யார் தெரியுமா?

Suriya 45 Movie Director RJ Balaji Details : சூர்யாவின் 45வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இவர் குறித்த தகவல்களை இங்கு பார்ப்போம். 

Suriya 45 Movie Director RJ Balaji Details : நடிகர்கள் இயக்குநராவதும், இயக்குநர்கள் நடிகராவதும் தமிழ் திரையுலகிற்கு புதிதல்ல. ரேடியோவில் ஆர்.ஜே-வாக இருந்தவர் பாலாஜி. இவர், தற்போது நடிகர் சூர்யாவின் 45வது படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து, தமிழ் திரையுலக ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர். காரணம், இதுவரை தான் நடித்த படங்களை மட்டுமே இயக்கி வந்த ஆர்.ஜே.பாலாஜி, இப்போது ஒரு பெரிய ஹீரோ நடிக்கும் படத்தை முதன் முறையாக இயக்க இருக்கிறார். இவர் குறித்த தகவல்களையும், சூர்யா 45 படத்தில் இவர் கொண்டு வர இருக்கும் விஷயங்களையும் இங்கு பார்ப்போம். 

1 /8

சூர்யாவின் 45வது படத்தை இயக்குகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இவர், முன்னாள் ரேடியோ ஜாக்கி. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு ரேடியோக்களில் அதிகமாக கேட்கப்பட்ட நிகழ்ச்சிகளில் இவருடையது முதல் இடத்தில் இருக்கும். ஆர்.ஜே to சூர்யாவின் படத்திற்கு இயக்குநராக மாறியிருக்கும் பாலாஜி குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம். 

2 /8

சென்னையில் B.sc Computer Science படித்த ஆர்.ஜே.பாலாஜி, பின்பு கோயம்புத்தூரில் ஊடகவியல் டிப்ளமோ பயின்றார். மிக இளம் வயதிலேயே தனது தோழியும் காதலியுமான திவ்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். பேசுவதற்கும் பழகுவதற்கும் ஜாலியான பிரபலமாக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, அது போன்ற காமெடி படங்களிலேயே ஆரம்பத்தில் நடித்து வந்தார். 

3 /8

முதன் முதலாக, இவர் எழுதி ஹீரோவாக நடித்த படம் எல்.கே.ஜி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களுள் ஒன்று. இந்த படத்தை அடுத்து அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். 

4 /8

ஆர்.ஜே.பாலாஜிக்கு திரையுலகில் பல நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் இவர் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.

5 /8

சில மாதங்களுக்கு முன்பு வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி புதுவிதமான தோற்றத்தில் கலக்கினார். இந்த படத்தின் வேலைகள் முடிவதற்கு மட்டும் ஒன்றரை ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது. 

6 /8

மக்களுக்கு ஆர்.ஜே.பாலாஜியை மிகவும் பிடிக்க முக்கிய காரணம், அவரது தனித்துவமான ஐ.பி.எல் கமெண்ட்ரி. இது, ஒரு சில கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒத்துவரவில்லை என்றாலும், குடும்பத்துடன் அமர்ந்து ஜாலியாக கிரிக்கெட் பார்க்க ஆர்.ஜே.பாலாஜியின் கமெண்ட்ரிக்கள் முக்கிய காரணமாக அமைந்தது. 

7 /8

ஆர்.ஜே.பாலாஜி நடிகராக மட்டுமன்றி இயக்குநராகவும் கதையாசிரியராகவும் இருக்கிறார். இதைத்தாண்டி அவருக்கு தனிப்பட்ட ரீதியாக அவருக்கு மகிழ்ச்சியை தரும் விஷயமாக இருக்கிறது, பாட்கேஸ்ட். தனக்கென ஒரு பாட்கேஸ்டை துவங்கி அதில் இவர் வாரம் ஒரு முறை ஒரு எபிசோடை வெளியிட்டு வருகிறார். 

8 /8

ஆர்.ஜே.பாலாஜி, தனக்கென தனியாக ஒரு டீமை வைத்திருக்கிறார். இவர்கள் கதை எழுத மலை பிரதேசங்களுக்கு செல்வதுண்டு. இவர்கள் சேர்ந்து சூர்யா 45 படத்தை ஜாலியான கதையாக தருவார்களா, அல்லது சீரியஸானதாக இருக்குமா என்பது தெரியவில்லை. இந்த படம் குறித்த அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.