Immunity: குளிர்காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஹாய் சொல்லும் சூப்பர்ஃபுட் உணவுகள்

Winter Diet For Children:  குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் உணவுத் தேவைகள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை. அதிலும் குளிர்காலத்தில் உடலில் வெப்பத்தை அதிகமாக்கும் வகையிலான உணவுகள் தேவைப்படுகிறது.

குளிர்காலத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சூப்பர்ஃபுட்களை கொடுத்தால், நோய்கள் உங்கள் வீட்டு குழந்தைக்கு குட் பை சொல்லிவிடும்

1 /8

குளிர்காலத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சூப்பர்ஃபுட்களை கொடுத்தால், மருத்துவரை பார்க்கவே அவசியம் இருக்காது

2 /8

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், குளிர்காலத்தில் ஜலதோஷம் தான் முதலில் தொடங்கும், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நோய்கள் பீடிக்கும். குழந்தைகள் பாக்டீரியா அல்லது வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாகிறது. குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் இவை...

3 /8

பாலில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் உள்ளது, இது உடலை பலப்படுத்துகிறது. எனவே தினமும் காலை மற்றும் இரவு தூங்கும் முன் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டும். பால் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு மாற்றுக்களும் நிறைய உள்ளன. உதாரணமாக பாதம் பால், சோயா பால் என ஊட்டச்சத்து மிக்க பால்களையும் கொடுக்கலாம்

4 /8

ஜலதோஷம், இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்த்தொற்றுகள் தொற்றாமல் இருக்க வெல்லம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே, சர்க்கரைக்கு  பதிலாக வெல்லத்தைப் பயன்படுத்தவும்

5 /8

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கும் சூப் கொடுப்பது. எந்த சூப்பாக இருந்தாலும், அது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் பருவகால வைரஸ் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

6 /8

தினமும் ஒரு முட்டையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான சத்துக்களில் பெரும்பாலனவற்றை பூர்த்தி செய்யும். குழந்தைகளின் உணவில் தினசரி முட்டை சேர்க்க வேண்டும். 

7 /8

குளிர் காலத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக குறைகிறது, எனவே, ஆரஞ்சு பழங்களை கொடுக்க வேண்டும். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது

8 /8

குளிர்காலத்தில், ஊட்டச்சத்து மிக்க உலர் பழங்களை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும்