Food Toxins Health Alert: மிகவும் ஆரோக்கியமான உணவை நாம் தேர்ந்தெடுத்து உண்டாலும், அந்த உணவுகளில் கூடவேறு நச்சுகள் இருக்கலாம். நீங்கள் எதை வாங்குகிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருப்பது அவசியம்
நாம் ஆரோக்கியமான உணவை உண்பதற்காக பார்த்து பார்த்து பொருட்களை தேர்ந்தெடுத்தாலும், உணவு நூறு சதவீதம் ஆரோக்கியமானதாக இருக்குமா என்றால், இல்லை என்ற பதிலே கிடைக்கும். அதற்கு காரணங்கள் என்ன தெரியுமா?
தேர்ந்தெடுத்து ஆரோக்கியமான உணவை உண்டாலும், அதிலும் நச்சுகள் வரிசையாக இருக்கலாம். நீங்கள் எதை வாங்குகிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருந்தாலும் ஆபத்து நமது உணவுத் தட்டிலேயே இருக்கிறது
நாம் உண்ணும் காய்கனிகளில் ரசாயனம் கலந்திருக்கிறது. இது பயிரிடும்போது இருப்பது மட்டுமல்ல, காய் மற்றும் பழங்கள் விரைவில் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக பதப்படுத்தவும் இராசயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன
கோழிக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பிற சப்ளிமெண்ட்ஸ் கொடுக்கப்பட்டு அவை பெரிதாகவும் ஆரோக்கியமாகவும் வளர்க்கப்படுகின்றன. இப்படித்தான் பிராய்லர் கோழி இறைச்சி தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. இந்த நச்சுகள் சிலருக்கு வயிற்றில் தொற்று மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, பொருட்களை வாங்கும் போது கவனமாக இருக்கவும்.
பிபிஏ மற்றும் பிபிஎஸ் ஆகிய நச்சுகள் பிளாஸ்டிக் கொள்கலன்களிலும் உலோக கேன்களின் புறணிகளிலும் காணப்படுகின்றன. அவை உங்கள் ஹார்மோன் ஆரோக்கியத்தை சீர்குலைக்கலாம்.
கார்ன் சிரப் ஆரோக்கியத்திற்கு நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் நீங்கள் அதை உட்கொள்ளக்கூடாது. சர்க்கரை உள்ளடக்கம அதிகமாக இருப்பதால், இதை பயன்படுத்தும்போது, கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோயை அதிகரிக்கும். இந்த சிரப் பல பேக்கேஜ் உணவுகளில் காணப்படுகிறது,
டிரான்ஸ் கொழுப்பு மிகவும் பதப்படுத்தப்பட்ட மற்றும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படுகிறது. கொலஸ்ட்ரால், இதய நோய்கள், பக்கவாதம், உடல் பருமன் போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.
அதிகப்படியான சோடியம் உட்கொள்வது பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் கால்சியம் இழப்புக்கு வழிவகுக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அதிகமாக உள்ளது, அவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும். வீட்டில் பதப்படுத்தப்பட்ட உப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கல் உப்பைப் பயன்படுத்த வேண்டும். இதில் சோடியம் இல்லை என்பதால் எந்த ஆபத்தும் இல்லை