சனிப்பெயர்ச்சி, சனி அமாவாசை, சூரிய கிரகணம் நடக்கும் நாளில் 3 ராசிகளுக்கு பிறக்கும் அதிர்ஷ்டம்..!

Saturn Transit | சனி பெயர்ச்சி, சனி அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் நடக்கும் நாளில் 3 ராசிகளுக்கு பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் கிடைக்கும். 

சனி பெயர்ச்சி, சனி அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் ஒரே நாளில் நிகழ்கிறது. இந்த நிகழ்வுகள் 3 ராசிகளுக்கு சிறப்பான யோகத்தை கொடுக்க உள்ளது. அவை எந்த ராசிகள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

1 /8

சனி பகவான் ராசி மாற்றம் நடைபெறும் நாளில் சனி அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் ஒரே நாளில் நிகழ்கிறது. சனி அமாவாசையில் சனி பகவானை வழிபடுவது மிகவும் நல்லது. இந்த நாளில் இருந்து 3 ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது. 

2 /8

சனி பகவான் மீன ராசிக்கு மார்ச் 29, 2025 அன்று ராசி பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம் சூரிய கிரகணம் நிகழும். சனி அமாவாசையும் அதே நாளில் நிகழ்வதால், மிகப்பெரிய அமோக பலன்கள் 3 ராசிகளுக்கு கிடைக்கும்.

3 /8

மேஷம் (Aries): சனி ராசி மாற்றம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியவற்றின் நேர்மறையான விளைவுகள் உங்கள் ராசியான மேஷம் ராசியில் பிரதிபலிக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானத்தில் எதிர்பாராத அதிகரிப்பு ஏற்படலாம். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

4 /8

சனி ராசி மாற்றத்தால் மேஷம் ராசியினரின் சொத்து சம்பந்தமான விஷயங்களில் நல்ல விளைவுகள் ஏற்படும். நிலம், சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான சிறந்த சூழ்நிலைகள் உருவாகும்.

5 /8

கடகம் ராசி (Cancer): சனி ராசி மாற்றம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியவற்றின் நேர்மறையான விளைவுகள் உங்கள் ராசியான கடகம் ராசியில் பிரதிபலிக்கும். வேலை மற்றும் தொழிலில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். தம்பதி வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.

6 /8

கடகம் ராசியினர் புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால், இந்த காலகட்டம் மிகவும் சாதகமானதாக இருக்கும். வெற்றியின் வாய்ப்புகள் அதிகம். பித்ரு சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். சொத்து மற்றும் வாகனம் வாங்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகும்.

7 /8

விருச்சிகம் ராசி (Scorpio): சனி ராசி மாற்றம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியவற்றால் உங்கள் ராசியான விருச்சிகம் ராசியில் பிரதிபலிக்கும். நீண்டகாலமாக நடைபெறும் பிரச்சினைகள் தீரும். கடன்களில் இருந்து விடுபடலாம். புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும்.

8 /8

விருச்சிகம் ராசியினருக்கு புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கையில் புதிய உற்சாகம் ஏற்படும். உறவுகள் சம்பந்தமான பிரச்சினைகளில் வெற்றி கிடைக்கும்.