People With These Health Problems Should Not Use Perfume : சில உடல் நலக்குறைபாடு இருப்பவர்கள் கண்டிப்பாக தங்களது உடலில் நறுமண திரவியத்தை அடிக்க கூடாது. அவர்கள் யார் தெரியுமா?
People With These Health Problems Should Not Use Perfume : நாம் அனைவருமே வெளியில் கிளம்பும் போது வாசனை திரவியத்தை அடித்துக்கொண்டு செல்லும் நபர்களாக இருப்போம். ஆனால், சில ஆரோக்கிய குறைபாடு இருப்பவர்கள் கண்டிப்பாக இதனை உபயோகிக்க கூடாது. இதனால் அவர்களுக்கு பெரிய பெரிய பிரச்சனைகளும் கூட கிளம்பலாம். அப்படி, வாசனை திரவியத்தை உபயோகிக்கவே கூடாதவர்கள் யார் யார் தெரியுமா? அது குறித்து இங்கு பார்ப்போம்.
ஆஸ்துமா பிரச்சனை அல்லது சுவாசக்கோளாறு இருப்பவர்கள் கண்டிப்பாக அதிக நறுமணம் கொண்ட திரவியங்களை உபயோகிக்க கூடாது. இது, தும்மல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளை கிளப்பி விடும். எனவே, இது போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இதனை பெரும்பாலும் தவிர்த்து விடுவது நல்லது.
வாசனை திரவியத்தில் இருக்கும் சில இரசாயனங்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தலைவலி அல்லது குமட்டலை ஏற்படுத்தும். எனவே, அவர்கள் இதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
குழந்தைகளுக்கு மென்மையான சருமம் இருக்கும். அதே போல அவர்களுக்கு அப்போதுதான் சுவாச அமைப்புகளும் உருவாகும். அவர்களை கண்டிப்பாக வாசனை திரவியங்களிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டியது நல்லது.
பெரும்பாலான வாசனை திரவியங்களில், ஆல்கஹால் கலந்திருக்கும். இது சிலருக்கு அரிப்பு, எரிச்சல் உள்ளிட்ட சில சரும பிரச்சனைகளை உருவாக்கலாம். எனவே, இதனை அவர்கள் தவிர்ப்பது நல்லது.
ஒரு சில வேலை பார்க்கும் இடங்களில் வாசனை திரவியங்கள் அடித்து பணியாளர்கள் வேலைக்கு வரக்கூடாது. உதாரணத்திற்கு மருத்துவமனைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு அப்படி சில கட்டுப்பாடுகள் இருக்கும். இதனால் பிறருக்கு அசௌகரியம் ஏற்படும். அவர்கள் பணிக்கு செல்லும் போது செண்ட் பயன்படுத்த கூடாது.
தலைவலி பிரச்சனை இருப்பவர்களுக்கு வாசனை திரவியங்கள் அதனை கிளப்பிவிடும் ஒரு பொருளாக இருக்கும். இதனால் அவர்களுக்கு தலைவலி அதிகரிப்பதோடு, குமட்டல் மற்றும் தலை சுற்றல் ஆகியவையும் ஏற்படலாம். எனவே இந்த பிரச்சனை கொண்டவர்கள், அதனை உடையவருடன் பழகுபவர்கள் செண்ட் உபயோகிக்க கூடாது.
சில வாசனை திரவியங்களில் கலந்திருக்கும் இரசாயனங்கள் வெயிலில் படும் போது வேறு மாதிரியான கெமிக்கல் எதிர்வினைகளை உருவாக்கலாம். இதனால், சருமம் நிறம் மாறுதல், எரிச்சல் ஆகியவை ஏற்படலாம். எனவே, இது அதிக நேரம் வெயிலில் வேலை பார்ப்பவர்கள் செண்ட் உபயோகத்தை குறைத்துக்கொள்வது நல்லது.