Sexual harassment complaints online | பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள், இளம்பெண்கள் ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி? என்பது குறித்து அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu womens helpline | இளம் பெண்கள் மற்றும் மாணவிகள் பாலியல் தொந்தரவுகள் குறித்து ஆன்லைனில் புகார் அளிக்க முடியும். இது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் குறித்து தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.
'பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" நிதிகல்வி அறிவு பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தின் மூலம் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தின் மூலம் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அத்தனை முக்கியத்துவமான திட்டங்களான மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். கல்லூரி படிக்கும் பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டம், கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கான தமிழ்புதல்வன் திட்டம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக காவல்துறையும் சமூக நலத்துறையும் இணைந்து அனைத்து பெண்களுக்கும். மாணவிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
குழந்தைகளுக்கான விழிப்புணர்வு உதவி எண்கள் 1098, பெண்களுக்கான உதவி எண் 181, அதே போல் புதிதாக தொலைபேசியின் மூலம் மிரட்டுவோர்கள் மீது புகார் அளிப்பதற்கு சைபர் கிரைமின் எண் 1930 ஆகிய உதவி எண்கள் நம்முடைய முதலமைச்சர் அவர்களால் முறையாக 24 மணி நேரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புகார் அளிப்பவருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலே அதிக அளவு பெண்கள் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு தான். இங்கு தான் 41% பெண்கள் உழைக்கிறார்கள். பெண்களுக்கான பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இன்று பேருந்து நிலையத்தில் புதிய பேருந்தை தொடங்கி வைத்துள்ளோம். இந்த புதிய பேருந்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மாற்றி அமைத்துள்ளார்கள். பேருந்தில் உள் பக்கமும் வெளிப்பக்கமும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களை டிரைவர் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அவசர மணி ஆங்காங்கே பேருந்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு யாராவது இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் நீங்கள் அந்த பட்டனை அழுத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் அளவிற்கு பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். பெண் குழந்தைகள் தான் பெற்றோர்களை கவணித்துக்கொள்வார்கள். ஆகவே பெண் குழந்தைகளையும், ஆண் குழந்தைகளையும் சரி சமமாக வளர்க்க வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதிக்க சொல்லி வளருங்கள். பெண் குழந்தைகளை சமமாக படிக்க வைத்து இன்னும் தைரியமாக வளர்க்க வேண்டும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.