நவராத்திரி வெள்ளிக்கிழமை பூஜை செய்தால் என்ன பலன்? நிம்மதியுடன் வளமாய் வாழ வைக்கும் வழிபாடு!

Navarathri Worship Of Goddess :  குரோதி ஆண்டில் வரும் சாரதா நவராத்திரி மிகவும் சிறப்பானது. புரட்டாசி மாத சாரதா நவராத்திரியில் ஜகத்தை காக்கும் அன்னையை எப்படி வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும்...

தென்னிந்தியாவில் நவராத்திரியாக செய்யப்படும் பூஜைகள் மற்றும் வழிபாட்டிற்கு வட இந்தியாவில் துர்கா பூஜை என்று பெயர். தீமைகளை அளிக்கும் சக்தியை அன்னை சக்தியாக கொண்டாடும் காலம் இது...

1 /10

நவராத்திரியின் முதல் நாள் ஷைலபுத்ரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். சிவப்பு நிறம் நவராத்திரியின் முதல் நாளுக்கு உரியது. இந்நாளில் அம்மனுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடலாம்

2 /10

பிரம்மா என்றால் தவம், சாரிணி என்றால் தவம் செய்பவள். நவராத்திரியின் இரண்டாம் நாள் பிரம்மச்சாரிணியாக அம்மன் வழிபடப்படுகிறார். பிரம்மச்சாரிணி அம்மனுக்கு மஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும். எனவே, நவராத்திரியின் இரண்டாம் நாளில் மஞ்சள் நிறத்தில் அலங்காரம் செய்யலாம்

3 /10

ஆதி சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட நவராத்திரி திருவிழாவின் மூன்றாம் நாளில் அன்னை சந்திரகாந்தாவை வழிபட வேண்டும். பச்சை நிறம் அன்னைக்கு மிகவும் பிடித்தமானது என்பதால், இந்த நாளில் பச்சை நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

4 /10

குஷ்மாண்டா தேவி, ஆனந்தத்தைக் கொடுப்பவர், பிரபஞ்சத்தைப் படைத்த தேவிக்கு சாம்பல் நிறம் மிகவும் பிடிக்கும். அதனால்தான் நவராத்திரி நான்காம் நாளில் சாம்பல் நிறம் விசேஷமானது.  செல்வத்தையும் புகழையும் கொடுக்கும் அன்னைக்கு சம்பல் நிறத்தில் அலங்காரம் செய்யுங்கள்.

5 /10

நவராத்திரியின் ஐந்தாம் நாளில் ஸ்கந்தமாதாவை வழிபடுவது வழக்கம். ஸ்கந்தமாதாவுக்கு ஆரஞ்சு நிறம் பிடித்தமானது  

6 /10

ஆறாம் நாள் காத்யாயனி வடிவான துர்க்கையை வழிபடுவது வழக்கம். அன்னை காத்யாயனிக்கு வெள்ளை நிறம் மிகவும் பிடிக்கும். அமைதி மற்றும் தூய்மையின் அடையாளமான வெண்ணிற ஆடைகளால் அன்னையை அலங்கரிக்கலாம்.

7 /10

நவராத்திரியின் ஏழாவது நாளில் தேவியின் காலராத்திரி வடிவம் வழிபடப்படுகிறது.  இளஞ்சிவப்பு நிறம் காலராத்திரி அன்னைக்கு பிடித்தமானது. இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்து அன்னையை மகிழ்விக்கவும்.

8 /10

நவராத்திரியின் எட்டாவது நாள் அன்னை கௌரிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அன்னையின் சிறப்பு கருணை பக்தர்கள் மீது நிலைத்திருக்க அன்னையை நீல நிறத்தில் அலங்கரித்து வழிபடலாம்

9 /10

அன்னை சித்திதாத்ரி, சாதனைகள் படைக்க ஆசி அளிப்பவர். நவராத்திரியின் கடைசி நாளில், அதாவது ஒன்பதாம் நாளில், சித்திதாத்ரி அன்னைக்கு பிடித்தமான வெளிர் நீல நிறத்தைப் பயன்படுத்துங்கள்

10 /10

பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது