இதயத்தை காதலிப்பவரா? இருதயத்திற்கு தேவையான இந்த வைட்டமின்கள் ஆயுளை நீட்டிக்கும்!

Healthy Vitamin For Heart : நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளைத் தவிர்க்கவும், உடலில் சில வைட்டமின்கள் இருப்பது முக்கியம், அதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். 

இந்த 5 வைட்டமின்கள் இதயத்திற்கு மிகவும் முக்கியமானவை, இவை உடலில் சீராக இருந்தால் மாரடைப்பு அபாயம் குறையும்

1 /8

ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்ல, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம்

2 /8

இதயத் துடிப்பு இருக்கும் வரை தான் இந்த உலகில் உயிருடன் இருக்கிறீர்கள் என்று பொருள். எனவே, இதயம் ஆரோக்கியமாக இருக்க, சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியும் அவசியம்

3 /8

வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய உணவை சாப்பிடுவதால், ஆரோக்கியமாக இருப்பதுடன், இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். சில வைட்டமின்கள் இதயத்திற்கு மிகவும் முக்கியம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள், இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான 5 முக்கிய வைட்டமின்கள் இவை...  

4 /8

ஆரோக்கியத்தை பராமரிப்பதில் வைட்டமின் டி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் குறைபாடு உடல் நலத்தை மட்டும் பாதிக்காது இதயத்தையும் பாதிக்கிறது. இதய தசைகளை வலுவாக வைத்திருக்க உதவும் வைட்டமின் டி குறைபாடு, இரத்த அழுத்தம் அதிகரிப்பது போன்ற இதய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும் 

5 /8

 உடலுக்குத் தேவையான வைட்டமின்களில் ஒன்றான விட்டமி பி6, அதன் குறைபாடு ஆரோக்கியத்தையும், குறிப்பாக இதயத்தையும் பாதிக்கிறது. வைட்டமின் பி6 இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது, இதனால் மாரடைப்பு அபாயம் குறையும்

6 /8

விலங்குகளின் உணவில் இருந்து மனிதர்கள் பெறும் வைட்டமின் என்றால், அது வைட்டமின் பி 12. இது குறைந்தால், உடலுக்கும் உங்கள் இதயத்திற்கும் பிரச்சனை தான். இந்த வைட்டமின் இரத்தம் உறைவதைத் தடுத்து இதயத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைக்கிறது. வைட்டமின் பி 12 குறைபாடு மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். 

7 /8

வைட்டமின் சி என்பது உணவுகளில் இருந்து பெறப்படும் வைட்டமின் ஆகும், பெரும்பாலும் சிட்ரஸ் பழங்களில் இருந்து கிடைக்கும் இந்த வைட்டமின், இதய ஆரோக்கியத்திற்கு இது மிகவும் முக்கியமான வைட்டமின்களில் ஒன்றாகும். ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைக்கும் வைட்டமின் சி இதய பாதுகாப்புக்கு இது முக்கியம்.

8 /8

விட்டமின் ஈ, சருமத்தை அழகாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இந்த வைட்டமின் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது மற்றும் இதயத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.