Diabetes Control Tips: நீரிழிவு நோய், இன்றைய காலகட்டத்தில் பலரை பாடாய் படுத்தி வருகிறது. இதனால் பல வித உபாதைகளும் ஏற்படுகின்றன.
தவறான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், அனைத்து வயதினரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆபத்தான விஷயம் என்னவென்றால், ஒரு நபர் இந்த நோய்க்கு பலியாகிவிட்டால், அதை ஒருபோதும் முழுமையாக குணப்படுத்த முடியாது. இதை கட்டுப்படுத்த சில இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று கொய்யாப்பழம். கொய்யா மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பக்க விளைவுகள் கிடையாது: நீரிழிவு நோய் மருந்துகளை உட்கொள்ளும்போது ஏற்படும் பக்க விளைவுகளை போல கொய்யா சாப்பிட்டால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. அதிகப்படியான நன்மைகளை பெற இதை சரியான வழியில் மற்றும் சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.
கொய்யா இலைகளை எப்போது உட்கொள்ள வேண்டும்? இரவில் தூங்கும் முன் கொய்யா இலைகளை மென்று சாப்பிடுவது அளப்பரிய பலன்களை தருவதோடு, காலையில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வரும்.
இந்த நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது: நீரிழிவு நோயாளிகள் எந்த நேரத்திலும் கொய்யா (Guava) இலைகளை உட்கொள்ளலாம், ஆனால் இரவில் அதை உட்கொள்வது மிகவும் நல்லது என்று கருதப்படுவதாக ஆயுர்வேத நிபுணர்களின் கூறுகிறார்கள். இதற்குக் காரணம், இரவில் கொய்யா இலைகள் உடலில் நன்றாகக் கரைந்து, அதனால் உடலில் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். எனவே சர்க்கரை நோயாளிகள் இரவில் தான் இதை சாப்பிட வேண்டும்.
இலைகளை மெல்லும் சரியான வழி: கொய்யா இலைகளை மெல்லும் முறையையும் கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். இதற்கு, சிறிய மற்றும் பச்சை நிறத்தில் உள்ள நல்ல இலைகளைத் தேர்ந்தெடுக்கவும். 3-4 இலைகளை பறித்து, அவற்றை தண்ணீரில் நன்கு கழுவி, பின் ஒவ்வொன்றாக மென்று சாப்பிடுங்கள். மெல்லும் போது, இலைகளில் இருந்து சாறு வரும், அதை நீங்கள் குடிக்கலாம். மென்ற பிறகு, இலையின் மீதமுள்ள பகுதியை துப்பிவிட்டு வாயை கொப்பளிக்கவும். இதைச் செய்வதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பல நன்மைகள் கிடைக்கும்.
கொய்யா பழம்: கொய்யா பலருக்கு பிடித்த ஒரு இனிமையான பழமாகும். இந்த பழம் ஆண்டு முழுவதும் கிடைத்தாலும், குளிர்கால வெயிலில் அமர்ந்து உண்பதில்தான் இதன் உண்மையான மகிழ்ச்சி அடங்கியுள்ளது. எளிதில் கிடைக்கும் இந்தப் பழத்தை ஏழைகளின் ஆப்பிள் என்றும் அழைப்பர். கொய்யா சாப்பிடுவது குமட்டல் முதல் செரிமான பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
கலோரி அளவு: கொய்யாவில் கலோரிகளின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அதை உட்கொள்வதால் அதிக கலோரிகளைப் பெறுவது தவிர்க்கப்படுகின்றது. ஒரு கொய்யாவில் 37 முதல் 55 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது தவிர, கொய்யாவை உட்கொண்ட பிறகு ஒருவருக்கு நீண்ட நேரம் பசி இருக்காது. இதன் காரணமாக எடை இழப்பு உணவுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை