மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... 2025இல் தொடர் விடுமுறைகள் ஜாஸ்தி - எந்தெந்த நாள்களில் லீவு?

Long Weekend Holidays In 2025: அடுத்த 2025ஆம் ஆண்டில் எந்தெந்த மாதங்களில், எந்தெந்த நாட்களில் எல்லாம் மூன்று நாள்களுக்கும் மேல் தொடர் விடுமுறைகள் வருகிறது என்பது இங்கு பார்க்கலாம். 

2025ஆம் ஆண்டின் அரசு விடுமுறை நாள்களின் விவரங்கள் சமீபத்தில் வெளியானது. அதற்கேற்ப 2025ஆம் ஆண்டில் அரசு விடுமுறை, வார இறுதி நாட்களை ஒட்டி, தொடர்ச்சியாக நீண்ட நாள்கள் விடுமுறை வரும் தேதிகளை இங்கு மாதவாரியாக காணலாம்.

1 /8

2025ஆம் ஆண்டு இன்னும் இன்னும் 41 நாள்கள்தான் இருக்கின்றன. அடுத்தாண்டை பலரும் எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில், அடுத்தாண்டு எந்த நாள்களில் அரசு விடுமுறை என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த வகையில், அடுத்தாண்டு மூன்று நாள்கள், நான்கு நாள்கள், ஐந்து நாள்கள் என தொடர்ச்சியாக பல விடுமுறைகள் நாள்கள் வருகின்றன.   

2 /8

இது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாது சுற்றுலா செல்பவர்கள் என பலருக்கும் உதவிகரமாக இருக்கும். 2025ஆம் ஆண்டில் அரசு விடுமுறை, வார இறுதி நாட்களை ஒட்டி, தொடர்ச்சியாக நீண்ட நாள்கள் விடுமுறை வரும் தேதிகளை இங்கு மாதவாரியாக காணலாம்.   

3 /8

ஜனவரியில் தொடர்ந்து 6 நாள்கள் விடுமுறை: ஜனவரி 11 (சனி), ஜன. 12 (ஞாயிறு), ஜன. 13 (திங்கள் - போகி பண்டிகை), ஜன.14 (செவ்வாய் - தைப்பொங்கல்), ஜன.15 (புதன் - திருவள்ளூவர் தினம்), ஜன.16 (வியாழன் - உழவர் திருநாள்). இதில் போகி பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படாது என்றாலும் நீங்கள் சுற்றுலாவுக்கு திட்டமிட்டால் அந்த ஒருநாள் மட்டும் விடுமுறை எடுத்தால் போதும்.   

4 /8

மார்ச் மாதம் டபுள் ஜாக்பாட்: மார்ச் 14 (வெள்ளி - ஹோலி பண்டிகை), மார்ச் 15 (சனி), மார்ச் 16 (ஞாயிறு) என மூன்று நாள் தொடர் விடுமுறை வருகிறது. அதேபோல், மார்ச் 29 (சனி), மார்ச் 30 (ஞாயிறு), மார்ச் 31 (திங்கள் ஈகை திருநாள்) என மூன்று நாள் தொடர் விடுமுறை இருக்கிறது.  

5 /8

ஏப்ரலில் எக்கச்சக்க விடுமுறைகள்: அலுவல ஊழியர்களுக்கு நிச்சயம் ஏப்ரல், மே மாதங்களில் தொடர் விடுமுறை தேவை. ஏப்.10 (வியாழன் - மஹாவீர் ஜெயந்தி), ஏப். 11ஆம் தேதி நீங்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளும்பட்சத்தில், அடுத்து ஏப்.12 மற்றும் 13 ஆகியவை வார இறுதி நாள்களாகும். இதனால் நான்கு நாள்கள் விடுமுறை கிடைக்கும். அதேபோல், வெள்ளிக்கிழமையான ஏப். 18ஆம் தேதி புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. ஏப். 19, 20 ஆகியவை வார இறுதி நாள்களாகும் இதில் நான்கு நாள்கள் விடுமுறை கிடைக்கும். மே.10, 11 ஆகிய தேதிகள் வார இறுதி நாள்கள் ஆகும். மே 12ஆம் தேதி புத்த பூர்ணிமா கொண்டாடப்படுவாதல் மூன்று நாள்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கும்.   

6 /8

ஆகஸ்ட், செப்டம்பர் தொடர் விடுமுறைகள்: ஆக. 15 (வெள்ளி - சுதந்திர தினம்), ஆக.16 (சனி - ஜென்மாஷ்டமி), ஆக.17 (ஞாயிறு) என மூன்று நாள்கள் தொடர் விடுமுறைகள் கிடைக்கும். செப்டம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஓணம் கொண்டாடப்படுகிறது, அடுத்த இரண்டு நாள்கள் வார இறுதி நாள்கள் என்பதால் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் விடுமுறை கிடைக்கும்.   

7 /8

அக்டோபரிலும் டபுள் நன்மை: அக். 1ஆம் தேதி (வியாழன்) மஹா நவமி மற்றும் அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி (வெள்ளி) கொண்டாடுப்படுகிறது என்பதாலும் அடுத்த இரண்டு நாள்கள் வார இறுதி என்பதாலும் மொத்தம் நான்கு நாள்கள் விடுமுறை கிடைக்கும். அதே நேரத்தில், அடுத்தாண்டு தீபாவளி அக். 20ஆம் தேதி (திங்கள்) வருகிறது. எனவே, அதற்கு முந்தைய இரண்டு நாள்கள் அக். 18, 19 ஆகிய வார இறுதி நாள்களில் விடுமுறை என தீபாவளிக்கு மூன்று நாள்கள் விடுமுறை கிடைக்கும்.   

8 /8

டிசம்பரில் நாலு நாள்: டிசம்பர் 25 (வியாழன்) கிறிஸ்துமஸ் மற்றும் டிச.26, 27, 28 ஆகிய வார இறுதி நாள்களில் விடுமுறை கிடைக்கும். எனவே, அடுத்தாண்டு இறுதியில் நீங்கள் நாலு நாள்கள் விடுமுறை அனுபவிக்கலாம்.