Game Changer Box Office Collection : ராம் சரண் ஹீரோவாக நடித்திருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் வசூல் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
Game Changer Box Office Collection : இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பிறகு, இயக்குநர் ஷங்கர் கேம் சேஞ்சர் படம் மூலம் கம்-பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம், இந்த படம் பெரிய பட்ஜெட்டில் தெலுங்கு ஸ்டாரான ராம் சரணை வைத்து எடுக்கப்பட்டது. ஆனால், இந்த படமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சரியான வரவேற்பை பெறாத படமாக இருக்கிறது. 3 நாட்களுக்கு முன்பு வெளியான இந்த படம், இதுவரை செய்திருக்கும் வசூல் குறித்து இங்கு பார்ப்போம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்களுள் ஒன்று, கேம் சேஞ்சர். கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளியான இந்த படம், தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
கேம் சேஞ்சர் படம், இந்த வருடத்தின் முதல் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வீக்-எண்டிலும் இப்படத்தின் டிக்கெட் விற்பனை குறைவாகவே இருந்ததாக கூறப்படுகிறது.
முதல் நாளில், உலகளவில் சுமர் ரூ.51 கோடி வரை இந்த படம் கலெக்ட் செய்ததாக கூறப்பட்டது. சனி-ஞாயிறு என வீக்-எண்ட் தினங்கள் கடந்து சென்ற நிலையில் இப்படம் தற்போது வரை சுமார் ரூ.89 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் இந்த படம், இப்போது வரை 1.2 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் இரு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அதில் ஒருவருக்கு கியாரா அத்வானியும், இன்னொருவருக்கு அஞ்சலியும் ஜோடிகளாக நடித்திருக்கின்றனர்.
இந்த படம், ஷங்கரின் அதே டெம்ப்ளேட் கதையாக இருப்பதாகவும் பழைய ரீலையே வைத்து அவர் ஓட்டிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கேம் சேஞ்சர் படத்தை பார்க்க சென்று, பலர் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் சில தரவுகள் கூறுகின்றது. தமிழகத்தில் இந்த படம், வந்த சுவடு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டர்கள் குறைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.