ஒரு உறவில் நாம் பேச கூட வார்த்தைகளை கவனத்துடன் பேச வேண்டும். தவறுதலாக கூட நாம் பேசும் சில விஷயங்கள் ஒரு உறவை முடிவுக்கு கொண்டு வந்துவிடும்.
கணவன்-மனைவி அல்லது இரு காதலர்கள் இடையே சண்டைகள் வருவது சகஜம் என்றாலும், அந்த சண்டையின் போது பேசும் வார்த்தைகளில் கவனமுடன் இருக்க வேண்டும்.
உங்கள் துணை செய்யும் சிறு சிறு தவறுகளை பெரிதுபடுத்தி பேச வேண்டாம். தொடர்ந்து இது போல நீங்கள் பேசி வந்தால் உங்கள் துணை மனம் உடைந்து போக வாய்ப்புள்ளது.
உறவில் சண்டைகள் வரும் போது அவர்களை வெறுப்பேற்ற உன்னைவிட என் முன்னாள் காதலன்/காதலி எவ்வளவோ மேல் என்று ஒருபோது சொல்ல கூடாது. இது உறவை மேலும் விரிசலடைய செய்யும்.
உங்கள் காதலன் அல்லது காதலியின் முகத்தை பார்த்தாலே பிடிக்கவில்லை என்று அவர்களிடம் சொல்லி கூடாது. இது உங்கள் மீதுள்ள நம்பிக்கையை சிதைத்துவிடும்.
ஒரு உறவில் சண்டைகள் வருவது சகஜம் தான் என்றாலும், அவர்களிடம் நேரடியாக உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல கூடாது. அப்படி சொன்னால் உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு குறை இருக்கும். எனவே உங்கள் துணையிடம் இல்ல குறையை அடிக்கடி சுட்டி காட்ட கூடாது.